திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை இந்தியா சந்திக்கும்: ராகுல் காந்தி எச்சரிக்கை!

மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை நோக்கி இந்தியா சென்று கொண்டிருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.

News image

ராகுல் காந்தி

Updated On :4 ஜூன் 2026, 11:06 pm IST

மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை நோக்கி இந்தியா சென்று கொண்டிருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.

தில்லியில் உள்ள இந்திரா பவனில் பழங்குடியின மக்கள் தொடர்பாக காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பழங்குடியினத் தலைவர்களிடையே உரையாற்றினார்.

அவர் பேசுகையில், "விலைவாசி உயர்ந்து கொண்டிருக்கிறது. இது வெறும் ஆரம்பமே. மக்கள் இதற்கு முன்பு கண்டிராத ஒரு பொருளாதார நெருக்கடியை இந்தியா சந்திக்கவிருக்கிறது. அதற்கான செயல்பாடுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது. இனி யாராலும் அதனைத் தடுத்து நிறுத்த முடியாது’’ என்றார்.

முக்கிய நிறுவனங்களைச் சார்ந்த தனிநபர்கள் எதிர்க்கட்சியினருடன் அதிகளவு தகவல்களை பகிர்ந்து வருவதாகக் குறிப்பிட்ட ராகுல் காந்தி , ’நிறுவனங்கள் சார்ந்த கிளர்ச்சி’ ஒன்று நடைபெறும் என்றும் குறிப்பிட்டார்.

"ஒரு காலத்தில் முழுமையாக மோடியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வந்த அமைப்பு, தற்போது ஆட்டம் கண்டு அவர்களுக்குள்ளாகவே சிதைந்து அழிந்துகொண்டிருக்கிறது. பிரதமர் மோடி இன்னும் ஓராண்டு கூட பதவியில் நீடிக்கமாட்டார்” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

’’பெருகிவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்களிடையே அதிருப்தி தீவிரமாகும். நிறுவனங்கள் மீது அழுத்தங்கள் கூடி, தேர்தல் நடைமுறைகள், நிர்வாகம் சார்ந்த பிரச்னைகள் இந்தச் சூழலை மேலும் மோசமாக்கும்.

பொதுமக்களின் அதிருப்தியைக் கட்டுப்படுத்த அரசு வரும் காலங்களில் அசாதாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அதேநேரத்தில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகள் மீதான தனது கட்டுப்பாட்டையும் அவர்கள் இழந்து வருகின்றனர்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Summary

India Will Face a Massive Economic Crisis: Rahul Gandhi Warns

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.