திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

எதிர்க்கட்சித் தலைவர் என்ன ரப்பர் ஸ்டாம்ப்பா? சிபிஐ இயக்குநர் விவகாரத்தில் ராகுல் கடும் அதிருப்தி!

சிபிஐ இயக்குநர் தேர்ந்தெடுப்பு விவகாரத்தில் பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்...

News image

ராகுல் காந்தி - X

Updated On :12 மே 2026, 11:00 pm IST

புது தில்லி : சிபிஐ இயக்குநர் தேர்ந்தெடுப்பு விவகாரத்தில் ராகுல் காந்தி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவான சிபிஐ-இன் அடுத்த தலைமை இயக்குநரைத் தேர்ந்தெடுப்பதற்கான குழுவின் கூட்டம் இன்று (மே 12) கூடியது.

சிபிஐ-இன் தற்போதைய இயக்குநரின் பதவிக்காலம் மே 24-ஆம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து, இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை உள்ளடக்கிய இந்தக் குழு, சிபிஐ-இன் அடுத்த தலைமை இயக்குநரைத் தேர்ந்தெடுப்பதற்கான முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை பிரதமர் இல்லத்தில் இன்று நடத்தியது.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற ஆலோசனையில் என்னென்ன விவாதிக்கப்பட்டது என்பதைப் பற்றிய விவரம் எதுவும் வெளியாகாத நிலையில், ஆலோசனைக் கூட்டத்தை முடித்த பின் ராகுல் காந்தி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இன்று (மே 12) இரவில் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் : “எதிர்க்கட்சித் தலைவர் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் இல்லை. ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளுக்காக நான் எனது அரசமைப்பு கடமையை விட்டுக்கொடுக்கலாகாது.

சிபிஐ இயக்குநரைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறையில் எனது கடும் அதிருப்தியை நான் பிரதமர் நரேந்திர மோடியிடம் எழுத்துப்பூர்வமாக கடிதம் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறேன்” என்று குறிப்பிட்டு அந்தக் கடிதத்தின் நகலையும் பதிவிட்டுள்ளார்.

என்ன சொல்லியிருக்கிறார் ராகுல்?

அந்தக் கடிதத்தில், “இந்தியாவின் முன்னோடி புலனாய்வு முகமையான சிபிஐயைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளையும் பத்திரிகையாளர்களையும் விமர்சிப்பவர்களையும் குறிவைப்பது என உங்கள் அரசு தொடர்ந்து அதனை தவறாகப் பயன்படுத்தி வருகிறது.

அரசமைப்பு நிறுவனமான சிபிஐ கையகப்படுத்தப்படாமல் இருக்கவே அதற்கான தேர்வுக் குழுவில் எதிர்க்கட்சித் தலைவரும் சேர்க்கப்பட்டார். ஆனால் வருந்தத்தக்க நகர்வாக, அதற்கான நடைமுறையில் எந்தவொரு ஆக்கப்பூர்வமான எமது பங்களிப்பையும் நீங்கள் தொடர்ச்சியாக நிராகரித்து வருகிறீர்கள்.

தொடர்ச்சியாக, எழுத்துப்பூர்வமாக வேண்டுகோள் விடுத்தும், சிபிஐ இயக்குநர் தேர்வு விவகாரத்தில், தகுதியுள்ள நபர்களைப் பற்றிய முழு விவரமும் அடங்கிய அறிக்கைகளை என்னிடம் அளிக்கவில்லை. அதற்கு மாறாக, கமிட்டி ஆலோசனை கூட்டம் தொடங்கியபிம், தகுதி வாய்ந்த நபர்கள் 69 பேரைப் பற்றிய முழு விவரம் அடங்கிய அறிக்கைகளை என்னிடம் வழங்கி அவற்றை பரிசீலனைக்கு உட்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஒவ்வொருவரைப் பற்றியும் தெளிவாக ஆராய்ந்து தேர்ந்தெடுப்பது மிக முக்கியமாகும். முன்கூட்டியே உரிய தகவல் அளிக்காதது, தேர்வு செய்யும் நடைமுறையை சிதைப்பதாக அமைகிறது. இதன்மூலம், ஏற்கெனவே தேர்ந்தெடுத்து நீங்கள் வைத்துள்ள நபரை அப்பதவிக்கு நியமிக்கப்படுவதை உறுதிசெய்திருக்கிறீர்கள்.

கடந்தாண்டு மே 5-இல் நடைபெற்ற சிபிஐ இயக்குநர் தேர்வு ஆலோசனைக் கூட்டத்திலும் நான் கடும் ஆட்சேபனையை வெளிப்படுத்தியிருக்கிறேன். இது குறித்து கடந்த அக். 25-இல் உங்களுக்கு கடிதமும் எழுதியிருக்கிறேன்.

அதில், நியாயமான வெளிப்படையான வழிமுறைகளைப் பின்பற்ற பரிந்துரைத்திருக்கிறேன். ஆனால், அவற்றுக்கெல்லாம் இதுவரையில் எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை.

தேர்வுக் குழுவின் முக்கிய தரவுகளை நிராகரித்திருப்பதன்மூலம், அரசு இவற்றையெல்லாம் வெறுமனே ஒரு அதிகாரபூர்வ அலுவல் நடைமுறையாகத் தரம் குறைத்துவிட்டது. எதிர்க்கட்சித் தலைவர் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல. ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளுக்காக நான் எனது அரசமைப்பு கடமையை விட்டுக்கொடுக்கலாகாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Story image
Story image

Summary

CBI Director selection process - Rahul Gandhi has written to the Prime Minister recording dissent from the CBI Director selection process.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.