சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் பிரசாரம் செய்யும்பொருட்டு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று(ஏப். 18) சென்னை வந்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்லுக்கான தேதி நெருங்கி வரும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் தலைவர்கள் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை தமிழ்நாடு வராத மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், இன்று(ஏப். 18) ராகுல் காந்தி தமிழகம் வந்துள்ளார்.
தில்லியில் இருந்து சென்னை வந்துள்ள அவர், இங்கிருந்து பொன்னேரி சென்று அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.
அதன்பின்னர் சோளிங்கர், துறையூரில் நடைபெறும் பொதுக் கூட்டங்களிலும் பங்கேற்று வாக்கு சேகரிக்கிறார்.
ராகுல் வருகைக்கு மத்தியில் பிரதமர் மோடியும் இன்று கோவைக்கு வருகை தரவுள்ளார். கோவை கொடீசியா திடலில் மாலை 6 மணி முதல் 7 மணி வரை நடைபெறும் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் மோடி, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யவுள்ளார்.
Summary
Rahul Gandhi arrived in Chennai for election campaign
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை இந்தியா சந்திக்கும்: ராகுல் காந்தி எச்சரிக்கை!

மே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!
வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்!

ஏப். 18ல் தமிழகத்தில் 3 இடங்களில் ராகுல் பிரசாரம்?
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


