திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குரலை இழந்தது எப்படி? கலாரஞ்சினி விளக்கம்!

நடிகை கலாரஞ்சினி தன் குரல் குறித்து பேசியுள்ளார்...

News image

கலாரஞ்சனி

Updated On :14 ஏப்ரல் 2026, 3:06 pm IST

நடிகை கலாரஞ்சினி தன் குரலை இழந்தது குறித்து பேசியுள்ளார்.

தமிழ், மலையாள உள்பட தென்னிந்திய சினிமாவில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை கலாரஞ்சினி. நடிகை ஊர்வசியின் சகோதரியான இவர் இன்றும் நல்ல கதாபாத்திரங்களாகத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சினிமாவில் நல்ல வரவேற்பு இருந்தாலும் கலாரஞ்சனிக்கு பெரியளவில் பெயர் கிடைத்தது தொலைக்காட்சித் தொடர்களில்தான். பெரும்பாலும் நகைச்சுவை கதாபாத்திரங்கள் என்பதால் அவை ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தன.

அண்மையில், இவர் நடிப்பில் வெளியான பரதநாட்டியம் திரைப்படம் நல்ல வசூலைப் பெற்று வருகிறது. இப்படத்திற்கான, நேர்காணலில் பேசிய கலாரஞ்சனியிடம் அவர் குரலுக்கு என்ன ஆனது எனக் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “பல ஆண்டுகளுக்கு முன் நடிகர் பிரேம் நசிர் படத்தில் ஒரு காட்சியில் ரத்த வாந்தி எடுப்பது போல் நடிக்க வேண்டியிருந்தது. வழக்கமாக, ரத்த வாந்தி மாதிரி தெரிய தேங்காய் எண்ணையுடன் சிவப்பு பவுடர் கலந்து குடித்து வாயில் வைத்திருக்க வேண்டும். காட்சியின்போது துப்பினால் ரத்த வாந்தி எடுப்பது போல் இருக்கும்.

ஆனால், அன்று மேக்கப் மேன் தவறுதலாக தேங்காய் எண்ணைக்குப் பதில் அசிட்டோனை (acetone) கலந்துவிட்டார். நான் குடித்ததும் தொண்டை எரிய ஆரம்பித்தது. பின், என்ன நடந்தது என்றே தெரியவில்லை. அந்தச் சம்பவத்தால்தான் என் குரல் போனது.” எனத் தெரிவித்துள்ளார்.

கலாரஞ்சினியால் பேச முடியும் என்றாலும் குரல் கரகரப்புடன் இருக்கும் என்பதால் டப்பிங் குரலே கொடுக்கப்பட்டு வருகிறது. கலாரஞ்சினி பகிர்ந்த இச்சம்பவம் ரசிகர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Actress Kalaranjini has spoken about losing her voice.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.