இயக்குநர் சிபி சக்ரவர்த்தி நடிகர் ரஜினிகாந்த்தின் படத்திலிருந்து விலகியதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த்தின் 173-வது திரைப்படத்தை இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளதாக சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இதற்கான முதல்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தபோதே படத்தின் அறிவிப்பு விடியோவும் அதில் இடம்பெற்ற பின்னணி இசையும் பெரிய வரவேற்பைப் பெற்றது.
தற்போது, தயாரிப்பு நிறுவனம் இப்படத்திலிருந்து இயக்குநர் சிபி சக்ரவர்த்தியை மாற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவருக்குப் பதிலாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து ரஜினி 173 படத்தை இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்தடுத்து 2 இயக்குநர்கள் மாற்றப்பட்ட தகவல் ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், சிபி நடிகர் நானியை வைத்து தெலுங்கில் ஒரு திரைப்படம் இயக்க இருந்ததாகவும் அதற்கான முன் தயாரிப்பு பணிகளுக்கு அதிக செலவானதால் தற்போது, அந்த தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் கொடுத்த நெருக்கடியாலேயே, ரஜினி 173 படத்திலிருந்து விலகியுள்ளாராம்.
மேலும், அஷ்வத் மாரிமுத்து நடிகர் சிலம்பரசனின் 51-வது திரைப்படத்தை இயக்கவுள்ளதால் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்திடம் என்ஓசி பெற்று ரஜினி படத்தை இயக்க வருவாரா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.
Summary
the reason behind director Cibi Chakravarthy's exit from Actor Rajinikanth's film
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சிவராஜ்குமாரின் தமிழ்ப்படம் அறிவிப்பு!
ரஜினி - 173 திரைப்படத்தின் இயக்குநர் மீண்டும் மாற்றம்?

ரஜினியின் தன் வரலாறு நூலை எழுதும் பிரபல இயக்குநர்?
ரஜினி - 173 படப்பிடிப்பு எப்போது?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


