நடிகர் ரஜினிகாந்த்தின் 173-வது திரைப்படத்திலிருந்து இயக்குநர் சிபி சக்ரவர்த்தி விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் செல்சன் இயக்கத்தில் ஜெயிலர் - 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், தன் 173வது திரைப்படமாக சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்க இருந்தார்.
கூலி, ஜெயிலர் - 2 ஆகிய திரைப்படங்கள் ஆக்சன் படங்கள் என்பதால் அடுத்த திரைப்படத்திலாவது ஜனரஞ்சகமாக நடிக்க வேண்டும் என்பதற்காகவே இயக்குநர் சுந்தர். சி படத்தில் ஒப்பந்தமானார். ஆனால், சில காரணங்களால் சுந்தர். சி விலக, அப்படத்திற்கான இயக்குநராக சிபி சக்ரவர்த்தி ஒப்பந்தமானார்.
இதற்கான முதல்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தபோதே படத்தின் அறிவிப்பு விடியோவும் அதில் இடம்பெற்ற பின்னணி இசையும் பெரிய வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், தயாரிப்பு நிறுவனம் இப்படத்திலிருந்து இயக்குநர் சிபி சக்ரவர்த்தியை மாற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவருக்குப் பதிலாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து ரஜினி 173 படத்தை இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
அடுத்தடுத்து 2 இயக்குநர்கள் மாற்றப்பட்ட தகவல் ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Summary
director Cibi Chakaravarthi has exited actor Rajinikanth's 173rd film.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ரஜினி - 173: சிபி சக்ரவர்த்தி விலக இதுதான் காரணமா?

ரஜினியின் தன் வரலாறு நூலை எழுதும் பிரபல இயக்குநர்?

ரஜினி - 173 முழுக்கதை தயார்!
ரஜினி - 173 படப்பிடிப்பு எப்போது?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


