/

ஃபார்முலா பெற்றுத்தந்த விருது!

ஒரு பாலத்தின் மீது வாகனம் செல்லும்போது அந்த வாகனத்தின் எடை, பாலத்தின் தாங்கும் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஏற்படும் அழுத்தத்தை கணக்கிடும் வகையில் உருவாக்கப்பட்ட ஒரு ஃபார்முலா அனைத்து தரப்பினரிடமும்

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:43 pm

ஏ. பேட்ரிக்

ஒரு பாலத்தின் மீது வாகனம் செல்லும்போது அந்த வாகனத்தின் எடை, பாலத்தின் தாங்கும் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஏற்படும் அழுத்தத்தை கணக்கிடும் வகையில் உருவாக்கப்பட்ட ஒரு ஃபார்முலா அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றதால் உதகையை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை பிரீத்தி-க்கு தேசிய அளவிலான விருது வழங்கப்பட்டுள்ளது.

 வம2ப ல2 ( எக்ஸ் ஸ்கொயர்) என்ற அந்த சமன்பாட்டிற்குதான் இந்த விருது கிடைத்துள்ளது. இதற்கு ஆதாரமாக ராமேஸ்வரம்  தொங்கு பாலம் போன்ற அமைப்பை உருவாக்கி அதில் வேகம் மற்றும் தாங்கும் திறன் ஆகியவற்றை லண்டன் பாலத்துடன் ஒப்பிட்டு இப்புதிய சமன்பாட்டை உருவாக்கியுள்ளார்.

Story image

ஆசிரியை பிரீத்தி தெரிவித்தாவது:

""கணிதம் என்பது பாடமாக மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் மிகவும் அத்தியாவசியமானதாகும். அதனால்தான் கணிதம் அறிவியலின் ராணி என அழைக்கப்படுகிறது.

 இந்த கணிதத்தை அடிப்படையாக வைத்தே ஹைடிராலிக் சஸ்பென்சன் பிரிட்ஜ் வித் டிஜிட்டல் கால்குலேசன் என்ற கோணத்தில் பரவளையம் என்ற சமன்பாட்டை உருவாக்கினேன். பெங்களூருவில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியில் தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களைச் சேர்ந்தோர் பங்கேற்றிருந்தனர்.

 இக்கண்காட்சியில் சிறந்த சமன்பாட்டிற்காகவும், அதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்ததற்காகவும் ஜவஹர்லால் நேரு அறிவியல் மற்றும் கணிதக் கண்காட்சியின் சிறப்பு முதல் பரிசு எனக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த சமன்பாட்டின் அடிப்படையில் ஒரு பாலம் கட்டும்போது திட்டமிட்டுக் கட்டினால் அதற்கான செலவில் 35 சதம் வரை குறைக்க முடியுமென்பதே எனது கருத்தாகும்'' என்றார் பிரீத்தி.

 தற்போதைய நவீன யுகத்தில் புதிய கட்டுமானங்கள் அனைத்துமே கணக்கீடுகளின் அடிப்படையிலேயே கட்டப்படுகின்றன. அதில் பிரீத்தி போன்றவர்களின் இத்தகைய ஆதாரப்பூர்வமான கண்டுபிடிப்புகளால் கட்டுமானத்திற்கான செலவை குறைப்பதோடு அதன் நம்பகத்தன்மையையும் அதிகரிக்குமென்பதால் இத்தகையோரை ஊக்குவிப்பதற்காகவே இவ்விருது அவருக்கு வழங்கப்படுவதாக பரிசளிப்பு விழாவில் குறிப்பிட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.