"உன் நண்பனைப் பற்றி சொல்; நான் உன்னைப் பற்றி சொல்கிறேன்' என்று கூறுவார்கள். அதைப் போன்று ஒருவரின் கூகுள் தேடல் வரலாற்றை ஆய்வு செய்தால் அவரது மொத்த இணையவழி நடவடிக்கைகளும் தெரிந்துவிடும்.
இன்றைய காலச் சூழலில், எதைப் பற்றியும் தெரிந்து கொள்ள உதவும் தகவல் களஞ்சியமாக கூகுள் உள்ளது.
ஆனால் அந்தத் தகவல்களைப் பெற நாம் பதிவிடும் தகவல்கள்தான், இன்றைய இணையவழி நிறுவனங்களுக்கு பொருளாதாரத்தை ஈட்டும் பெட்டகமாக உள்ளது.
கூகுளில் ஒரு பொருளைப் பற்றி தேடிவிட்டால்போதும், அடுத்ததாக நீங்கள் எந்த ஓர் இணையவழி பக்கத்தைத் திறந்தாலும், அந்தப் பொருள்களின் விளம்பரங்கள் உங்களைப் பின் தொடரும்.
உங்கள் செல்லிடப்பேசியில் உள்ள லொகேஷனை வைத்து நீங்கள் சென்று வந்த கடைகளின் பெயரைக் குறிப்பிட்டு அதுதொடர்பான விளம்பரங்கள் உங்களை அறியாமலேயே பின்தொடரும்.
இதுபோன்ற ஏராளமான இணையவழி விளம்பர உத்திகள் நம்மை அறியாமலேயே நம்மைப் பின்தொடர்கின்றன.
இவற்றை முற்றிலும் தடுக்க முடியாது என்றாலும், இதில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முடிந்த வரை நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
அப்படி பாதுகாக்கும் ஓர் அம்சம்தான், கூகுள் தேடலில் பதிவிடும் "தேடல் வரலாற்றை' அழிக்கும் சேவையாகும்.
நான்கு வாரங்கள், ஏழு நாள்கள், 24 மணி நேரம், கடைசி ஒரு மணிநேரம் ஆகிய இடைவெளியில் தேடல் வரலாற்றை அழிக்க மட்டுமே இதுவரையில் கூகுள் அனுமதி அளித்து வந்தது.
தற்போது 15 நிமிடங்களுக்கு முன்பு செய்த தேடல் வரலாற்றை உடனடியாக அழிக்கும் புதிய வசதியை கூகுள் அளித்துள்ளது. இதன் மூலம் நாம் கூகுள் தேடலில் பதிவு செய்த தகவல்களை உடனடியாக அழிக்க முடியும்.
இந்த சேவை ஐபோன் பயன்பாட்டாளர்களுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதமே கூகுள் அளித்தது. தற்போது ஆன்ட்ராய்டு பயன்பாட்டாளர்களுக்கும் இது வழங்கப்பட்டுள்ளது.
இதைப் பெற கூகுளை அப்டேட் செய்து கொண்டு, கூகுளில் செயலியைத் தேர்வு செய்து உள்ளே சென்றால் 15 நிமிடங்களில் அழிக்கும் (டெலிட் லாஸ்ட் 15 மினிட்ஸ்) என்ற புதிய சேவை இருக்கும். இதைப் பயன்படுத்தி உங்கள் கூகுள் தேடல்களை உடனடியாக அழிக்கும் பழக்கத்தை பயன்படுத்தினால் நம் தகவல்களும் பாதுகாப்பாக இருக்கும், நாமும் பாதுகாப்புடன் இருக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு

‘எக்ஸ்’ தளத்தில் ஆபாச உள்ளடக்கம்: எலான் மஸ்குக்கு பிரான்ஸ் அழைப்பாணை

அடுக்குமாடி குடியிருப்புகளில் பாமக வேட்பாளா் பாலு பிரசாரம்!

தெற்கு லெபனானில் சிலுவை அவமதிப்பு: இஸ்ரேல் வீரருக்கு வலுக்கும் கண்டனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


