ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களின் மூளையாகச் செயல்படுகிறது கூகுள் பிளே ஸ்டோர். அறிமுகம் செய்த 10 ஆண்டுகளில் பிளே ஸ்டோர் இல்லாத ஸ்மார்ட் போன்கள் இல்லை என்றே சொல்லலாம். சுமார் 30.5 லட்சம் செயலிகள் (ஆப்கள்) இதில் உள்ளன. இதில், கட்டணத்துடன் பதிவிறக்கம் செய்ய வேண்டிய செயலிகளும், இலவச செயலிகளும் அடங்கும்.
தற்போது ஸ்மார்ட் டிவிகளிலும் ஆன்ட்ராய்டு தொழில்நுட்பம் இணைக்கப்பட்டு வெளியாவதால், விளையாட்டு (கேம்ஸ்) செயலிகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. உலகம் முழுவதும் புதிது புதிதாய் விளையாட்டு செயலிகளை உருவாக்குவதில் பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கூகுள் நிறுவனம் "பிளே பாஸ்' என்ற புதிய சேவையை இந்தியாவில் தொடங்கி உள்ளது. விளம்பர இடையூறுகள் இல்லாமல் நவீன செயலிகளைப் பதிவிறக்கம் செய்யவும், விளையாட்டு செயலிகளைப் பயன்படுத்தவும் இது
உதவும்.
முதலில் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த சேவை தற்போது ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா உள்பட 90 நாடுகளில் உள்ளது. இது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முதல் மாதம் இலவசம் என்றாலும், அதன் பின்னர் மாதம் ரூ.99 அல்லது ஆண்டு சந்தா ரூ.889 அல்லது பிரீபெயிட் திட்டம் ரூ.109 ஆகிய மூன்றில் ஏதாவது தேர்வு செய்து கொள்ளலாம். ஒருவர் பெற்ற சேவையை தனது குடும்ப உறுப்பினர்கள் 5 பேருக்கு பகிர்ந்து பயன்படுத்தலாம். இதன் மூலம் 59 நாடுகளில் உருவாக்கப்படும் செயலிகளை 1,000க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் பதிவிறக்கம் செய்யலாம்.
"பிளே பாஸ்' சேவையைப் பெற ஆன்ட்ராய்டு 4.4 வெர்ஷன் கொண்ட ஸ்மார்ட் போனும், பிளே ஸ்டோர் செயலி 16.6.25 மற்றும் அதற்கு மேலான வெர்ஷனாக இருக்க வேண்டும். இதை உறுதி செய்துவிட்டு, பிளே ஸ்டோர் செயலிக்குள் சென்று வலது மேற்புறம் உள்ள "புரோபைல்' படத்தை "கிளிக்' செய்து "பிளே பாஸ்' -ஐ தேர்வு செய்தால் போதும்.
ஆன்ட்ராய்டு போன் பயன்பாட்டில் உலகிலேயே இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவில் இந்த "பிளே பாஸ்' சேவை, பெரும் வருவாயை ஈட்டும் என்று கூகுள் நிறுவனம் எதிர்பார்த்துள்ளது. எனினும், பயன்பாட்டாளர்களும் தொடர்ந்து கட்டணமில்லா செயலிகளையும் பதிவிறக்கம் செய்யலாம். இந்தியாவில் உருவாக்கப்படும் செயலிகளை உலக நாடுகளுக்கு இந்த கூகுள் பாஸ் மூலம் கொண்டு செல்லவும் இது உதவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரிஷப ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
எடப்பாடி பழனிசாமி பிரசாரத்துக்கு தடை கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு!

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு

‘எக்ஸ்’ தளத்தில் ஆபாச உள்ளடக்கம்: எலான் மஸ்குக்கு பிரான்ஸ் அழைப்பாணை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


