புகைப்படம், விடியோக்களைப் பகிர்வதற்காக உருவாக்கப்பட்டது இன்ஸ்டாகிராம் செயலி.
மக்களிடையே குறுகிய காலத்தில் பிரபலமடைந்ததால் 2012-இல் ஃபேஸ்புக் நிறுவனம் இன்ஸ்டாகிராமை வாங்கியது.
இதே அம்சங்களைக் கொண்ட "ஸ்னாப் சாட்' செயலிக்குப் போட்டியாக பல்வேறு புதிய சேவைகளை இன்ஸ்டாகிராமில் ஃபேஸ்புக் அறிவித்தது. பயன்பாட்டாளர்களின் நலனைக் கருதி தினந்தோறும் எத்தனை மணி நேரம் பயன்படுத்தப்படுகிறது என்பதை பயன்பாட்டாளர்களே நேரத்தை நிர்ணயிக்கும் "யுவர் ஆக்டிவிடி' என்ற புதிய சேவையை இன்ஸ்டாகிராம் 2018-இல் தொடங்கியது. இதில் நாளொன்றுக்கு 10 அல்லது 15 நிமிஷங்களுக்கு இன்ஸ்டாகிராம் பயன்பாட்டை அனுமதிக்க பயனாளர்களே முடிவு செய்யும் வகையில் அமைந்திருந்தது. இந்த நேர இடைவெளியில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையை 30 அல்லது 45 நிமிஷங்கள் அல்லது ஒன்று, இரண்டு, மூன்று மணி நேரத்துக்கு இன்ஸ்டாகிராம் நீட்டித்துள்ளது. புகைப்படம் மற்றும் விடியோக்கள் பதிவேற்றம் செய்வதிலேயே முழு நாளையும் செலவழிப்பவர்களை எச்சரிக்கவே, இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமிற்குள் நுழைந்தாலே இந்த புதிய சேவையில் நேரத்தை தேர்வு செய்யக் கூறும் எச்சரிக்கை தகவல் தானாகவே வெளியாகும். தினசரி நேர பயன்பாட்டைக் கடந்துவிட்டால் எச்சரிக்கை தகவல் அளிக்கும்.
இதேபோன்று, செயலியின் பயன்பாட்டில் இருந்து சிறிது நேரம் இடைவெளியை அளிக்கும் "டேக் ஏ பிரேக்' என்ற சேவையையும் இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ளது. 10, 20, 30 நிமிட இடைவெளியைத் தேர்வு செய்தால், அறிதிறன் பேசியின் முழுத் திரையையும் மறைக்கும் வகையில் இடைவெளிக்கான தகவல் வெளியாகும். இதைப் பயன்படுத்தி இன்ஸ்டாகிராமை விட்டு வெளியேறவும் செய்யலாம் அல்லது மீண்டும் பயன்பாட்டைத் தொடரலாம்.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயர் மிட்டா என மாற்றம் செய்யப்பட்ட பிறகு, அந்த நிறுவனத்தின் வருமானம் திடீரென சரிந்தது. இதற்கு ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் போன்ற மிட்டா நிறுவனத்தின் செயலிகளின் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை குறைந்ததே காரணம். இந்தியாவில் இணைய பயன்பாட்டுக் கட்டணம் அதிகரித்ததே பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை குறைவுக்கு காரணம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு

‘எக்ஸ்’ தளத்தில் ஆபாச உள்ளடக்கம்: எலான் மஸ்குக்கு பிரான்ஸ் அழைப்பாணை

அடுக்குமாடி குடியிருப்புகளில் பாமக வேட்பாளா் பாலு பிரசாரம்!

தெற்கு லெபனானில் சிலுவை அவமதிப்பு: இஸ்ரேல் வீரருக்கு வலுக்கும் கண்டனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


