பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய சேவைகள், விற்க வேண்டிய பொருள்கள், தெரிவிக்க வேண்டிய அறிவிப்புகள் எதுவாக இருந்தாலும் அவற்றை பொது ஊடகங்கள் வாயிலாக வெளியிடுவது தான் மக்களை சென்றடைவதற்கான வழியாகும். வணிக நிறுவனங்கள், உற்பத்தி தொழிலகங்கள், சேவை நிறுவனங்கள், மருத்துவமனைகள், அரசுகள் உள்ளிட்ட எந்த நிறுவனமாக இருந்தாலும் மக்களுக்குத் தெரிவிக்க "தகவல்தொடர்பை' சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. அச்சு, தொலைக்காட்சி, இணையதளம், திரைப்படம், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட ஏராளமான பொது ஊடகங்கள் வந்துவிட்ட நிலையில், அவற்றில் தினமும் ஏராளமான தகவல்கள், செய்திகள், விளம்பரங்கள் குவிந்தபடியே இருக்கின்றன. இவற்றைப் பார்ப்பதற்கும், படிப்பதற்கும் மக்களுக்கு போதுமான நேரம் மட்டுமல்ல, பொறுமையும் இல்லை.
அப்படியானால், கொட்டிக் கிடக்கும் தகவல்கள், செய்திகள், விளம்பரங்களில் மக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டுமானால், அது மற்றவற்றில் இருந்து மாறுபட்டதாக இருக்க வேண்டும். தகவல்கள் கண்களைக் கவர்வதாகவும், கவனத்தை ஈர்ப்பதாகவும் இருக்க வேண்டும். இந்த இடத்தில் தான் "தகவல் தொடர்பு வடிவமைப்பு' (கம்யூனிகேஷன் டிசைன்) முக்கியத்துவம் பெறுகிறது.
எந்த வாடிக்கையாளர்? தகவல்கள் யாரைச் சென்றடைய வேண்டும்? என்பதைப் புரிந்துகொண்டு, அவர்களை ஈர்க்கும்படி அழகியலோடு தகவல் சொல்லுதல் என்பது ஒரு கலை. நுகர்வு கலாசாரம் வேகமெடுத்த பிறகு, இந்த கலையின் முக்கியத்துவம் பெருகிவிட்டது.
மோஷன் கிராஃபிக்ஸ், டிஜிட்டல் அனிமேஷன், ஆவணப்படமெடுத்தல், காணொலி தவிர, வழக்கமான அச்சு, இதழியல் மற்றும் விளக்கப்படம் ஆகியவற்றுடன் தொடர்புடையது தான் தகவல்தொடர்பு வடிவமைப்பு. ஒரு தகவலை கண்ணுக்கும் சிந்தைக்கும் இனிமையானதாக கவர்ந்திழுக்கும் வகையில் கூறும் மிகப்பெரிய தொழிலாக தகவல் தொடர்பு வடிவமைப்பு உருவெடுத்துள்ளது. வேகமாக வளர்ந்துவருவது மட்டுமல்லாம், விரைவான மாற்றங்களுக்கும் தன்னை உட்படுத்திக்கொண்டு தேவைக்கேற்ப மாறிவருவது இத்தொழிலின் தனிச்சிறப்பாகும்.
தேவைப்படும் பண்புக்கூறுகள்: படைப்பாக்கத்திறன், உந்து ஆர்வம், காட்சி அறிவு(விஷுவல் லிட்டரசி), சிம்மெட்ரி, அலைன்மென்ட் , நுணுக்கப் பார்வை ஆகியவை தகவல் வடிவமைப்புத் தொழிலில் ஈடுபட விரும்புபவர்களின் அடிப்படைப் பண்பாக இருக்க வேண்டும்.
இந்த பண்புக்கூறுகளைப் பெற்றிருப்போர் கண்ணை மூடிக்கொண்டு தகவல் தொடர்பு வடிவமைப்புத்தொழிலில் ஈடுபடலாம்.
காட்சி அறிவு என்றால் என்ன? பழுப்புக்கும் அரைவெள்ளைக்கும்; வெளிர் ஊதா நிறத்திற்கும், ஊதா நிறத்திற்கும் இடையே காணப்படும் வித்தியாசங்களை உடன் உணரக்கூடிய தெளிவு இருக்க வேண்டும். ஒலிம்பிக் வளையங்கள் மற்றும் ஆடி காரின் வளையங்கள் ஆகிய இரண்டு சின்னங்களுக்கும் இடையிலான மாறுபாட்டை உணரக்கூடியவராக இருக்கவேண்டும். எவரும் சுட்டிக்காட்டுவதற்கு முன்பாகவே ஆங்கில எழுத்துருக்களில் "ஏரியல்' மற்றும் "ஹெல்விட்டிகா'வுக்கும் இடையே ஒளிந்திருக்கும் வித்தியாசத்தைக் கண்டுபிடிக்கக் கூடியவராக இருந்துவிட்டால், இத்தொழிலுக்கு 100 சதம் பொருந்தக்கூடியவர் என்று உங்களைச் சொல்லலாம்.
வேலைவாய்ப்புகள்: உற்பத்திப்பொருள், சேவை உள்ளிட்ட எதையும் சந்தைப்படுத்துவதற்கான போட்டி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீச்சோடு இருக்கிறது. எந்தவொரு வணிகத்தை சந்தைப்படுத்துவதற்கும் சமூகவலைத்தளப்பதிவுகள் தவிர்க்கமுடியாததாகிவிட்டன. சமூகவலைதளங்களோ, மக்களின் "அத்தியாவசியப்'பகுதிகளாகிவிட்டன. நுகர்வுச்சந்தை விரிவாகி வருவதால் சந்தைப்படுத்தல் சந்தையும் விரிவாகி வருகின்றது. இது தகவல்தொடர்பு வடிவமைப்பாளர்களின் வேலைவாய்ப்புக்கான வாசலை திறந்து வைத்துள்ளன.
பிராண்டிங் மற்றும் ஐடென்டிட்டி டெவலப் மென்ட் பெருகி வருவதால், அவை தனித்துறையாக மாறி வருகின்றன. வடிவமைப்பு பட்டதாரிகளுக்கு அச்சு மற்றும் பதிப்புத் தொழிலில் நல்லவாய்ப்புகள் காணப்படுகின்றன. நாளேடுகள், மாத-வார இதழ்கள், நூல்கள் உள்ளிட்ட அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வருவதால், தகவல்தொடர்பு வடிவமைப்பாளர்களின் வேலைவாய்ப்பும் பெருகியுள்ளது.
தகவல்தொடர்பு வடிவமைப்பாளர்களின் தேவை தவிர்க்க முடியாததாகி மாறியுள்ள மற்றொரு வெளிதான், சமூகவலைதளங்கள். சுகாதாரம், கல்வி போன்ற சமூக சிக்கல்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக இருக்கட்டும், வர்த்தகச்சின்னங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதாக இருக்கட்டும், அனைத்திற்கும் தகவல்தொடர்பு வடிவமைப்பாளர்களின் தேவை அவசியம் தேவை.
தகவல்தொடர்பு வடிவமைப்பு களம் வேகமாக விரிவடைந்துவருகிறது. இத்தொழிலில் ஈடுபட்டிருப்போர் தொழில்நுட்பர்கள், சமூக அறிவியலாளர்கள், வணிகப் பிரதிநிதிகள், இளம் தொழில்முனைவோர்கள் ஆகியோருடன் செயல்பட்டு வருகிறார்கள். டேட்டா அனாலிசிஸ், டேட்டா விஷுவலைசேஷன் ஆகிய துறைகளிலும் தகவல் தொடர்பு வடிவமைப்பாளர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் திறந்துவைக்கப்பட்டுள்ளன.
பயனாளர்களின் மாறிவரும் விருப்பங்களுக்குத் தகுந்தபடி செல்லிடப்பேசி செயலிகள், இணையதளங்களை மாற்றியமைக்க வேண்டியிருப்பதால், பயனாளர் அடிப்படையிலான வடிவமைப்புகள் பெருகி வருகின்றன. இதனடிப்படையிலான காட்சி வடிவமைப்புகளுக்கு முக்கியத்துவம் அதிகமாகி வருவதால், தகவல் தொடர்பு வடிவமைப்பாளர்களின் வேலைக்களம் பரந்துபட்டதாக மாறியுள்ளது.
இதனால் இன்றைய தகவல் தொடர்பு வடிவமைப்பாளர், கிராஃபிக் டிசைனர் , டிஜிட்டல் ஆர்டிஸ்ட் , டேட்டா ஆர்கிடெக்ட், ஃபிலிம்மேக்கர், சோஷியல் மீடிய எந்துசியசிஸ்ட் போன்ற பல பரிணாமங்களை எடுக்க வேண்டியிருக்கும்.
இயற்கை தந்துள்ள அழகியல் திறன்களை சரியாக குவித்துக் கொண்டால், காலம் தந்துள்ள அழியா வரம் பெற்றுள்ள தகவல்தொடர்புத் துறையில் வடிவமைப்பாளராகச் சாதனைகளைக் குவிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மே.வங்கத்தில் வாக்குப்பதிவு நாளில் பிரதமர் மோடி சாலை வலம்! காரணம் என்ன?

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


