சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

வணிகமயமாகும் விண்வெளி!

விண்வெளி வணிகமயமாகி வருகிறது என்பது இப்போது ஆச்சரியம் தரும் விஷயம் இல்லை.  

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:49 pm

எஸ். ராஜாராம்


விண்வெளி வணிகமயமாகி வருகிறது என்பது இப்போது ஆச்சரியம் தரும் விஷயம் இல்லை. அமெரிக்கா, ரஷ்யா அல்லது சீனா போன்ற பாரம்பரிய விண்வெளி நிபுணத்துவ நாடுகள் வரிசையில் இப்போது இந்தியா, ஐரோப்பிய யூனியன், இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் (யு.ஏ.இ) போன்ற நாடுகளும் புதிய விண் வெளிப் போட்டியில் இணைந்துள்ளன.

செயற்கைக் கோள்கள் செலுத்தப்படுவது அதிகரித்து வரும்நிலையில், அண்மைக்காலமாக விண்வெளிச் சுற்றுலா என்ற கருத்தாக்கமும் வலுப்பெற்று வருகிறது. அடுத்த சில பத்தாண்டுகளில் இப்போதைய விமானப் போக்குவரத்து போல விண்வெளிச் சுற்றுலாவும் வளர்ச்சி அடைந்துவிடும் என்கிறார்கள் விண்வெளி நிபுணர்கள்.

விண்வெளிச் சுற்றுலா என்பது தற்போது மிகவும் செலவு உள்ளதாக உள்ளது. மிகக் குறைந்த எண்ணிக்கை உள்ள நபர்களே விண்வெளிச் சுற்றுலா செல்ல இப்போது தயாராக இருக்கிறார்கள். என்றபோதிலும், இந்நிலை எப்போதும் இருக்கும் என்று சொல்லமுடியாது.

1930 -களில் விமானங்களில் பயணம் செய்வது மிக ரிஸ்க்கான ஒன்றாகக் கருதப்பட்டு வந்தது. சிறிது காலத்திலேயே தொழில்நுட்பங்கள் வளர்ந்தன. விமானப் பயணம் பாதுகாப்பானது என்ற எண்ணம் உருவானது. விமானப் போக்குவரத்து தற்போது மிகவும் சாதாரணமாகிவிட்டது. அதைப் போன்ற நிலையே விண்வெளி சுற்றுலாவுக்கும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

ஒரு காலத்தில் அமெரிக்கா, சோவியத் ரஷியா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே நிலா சொந்தமானது போன்ற நிலை இருந்தது, தற்போதைய தொழில்நுட்ப முன்னேற்றத்தில் தனியார் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நாடுகள் அனைத்துக்குமே நிலவு ஒரு முக்கியமான ஆய்வு கேந்திரமாகிவிட்டது.

இப்போது சீனா, இந்தியா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான், இஸ்ரேல் ஆகிய நாடுகள் நிலவுக்கு விண்கலங்களை அனுப்பியுள்ளன. இதில் வெற்றி, தோல்விகள் இருந்தாலும் இந்த நாடுகள் அனைத்தும் எதிர்கால ஆய்வுகளையும் இதற்காகத் திட்டமிட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு சீனா தனது விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. நிலவின் மண் மாதிரிகளைச் சேகரித்துக் கொண்டு அந்த விண்கலம் திரும்பியது. இதன் அடுத்தகட்டமாக நிலவுக்கு மனிதனை அனுப்ப சீனா திட்டமிட்டு வருகிறது.

அடுத்ததாக கடந்த ஆண்டு ஜப்பானும் தனது செயற்கைக் கோளை விண்வெளிக்கு அனுப்பி, சிறு கோளின் மாதிரிகளை சேகரித்திருக்கிறது. வருங்காலத்தில் அமெரிக்காவுடன் இணைந்தோ, தனிப்பட்ட முறையிலோ ஜப்பான் விண்வெளிப் பயணங்களை ஏற்பாடு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இதேபோன்று, நிகழாண்டு முழுவதும் விண்வெளித் திட்டங்களையும், நிலாவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்ட பரிசோதனைகளையும் நாம் காண முடியும்.

விண்வெளிப் பயணங்கள் ஆரம்பநிலையில் மிக நீண்ட பயணமாக இல்லாமல், குறுகியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேரடியாக நிலவுக்கு உடனே செல்லாமல், பூமியின் சுற்றுவட்டப் பாதை வரை உடனே செல்லலாம் என நாசா திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டங்கள் புதிய கேள்விகளையும் எழுப்பியுள்ளதாகக் கூறுகிறார் விஞ்ஞானி பால் கோஸ்டெஜ். அண்டார்டிக் கண்டம் போல நிலவில் மனிதர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தத் தேவை உள்ளதா, சுற்றுலா முதல் நிலவில் கனிம வளங்களை உரிமை கோருவது வரை அனைவருக்கும் சொந்தம் என விட்டுவிடுவதா போன்ற கேள்விகளுக்குச் சர்வதேச சமூகம் விடை காண வேண்டியது அவசியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.