உலக விண்வெளித் திட்டத்தில் புதிய வரவு ஐக்கிய அரபு அமீரகம். ஆனால் குறுகிய காலத்திலேயே தனது தடத்தை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது அந்நாடு.
2019 - ஆம் ஆண்டு செப்டம்பரில் கஜகஸ்தானில் இருந்து சோயுஸ் ராக்கெட் மூலம் விண்வெளிக்குச் சென்ற மூவரில் ஒருவர் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த விண்வெளி வீரர். இதையடுத்து, ஐக்கிய அரபு அமீரகம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய "ஹோப்' விண்கலம் கடந்த பிப்ரவரியில் செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது. செவ்வாயின் வளிமண்டல ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ள இந்த விண்கலம் அரபு உலகின் முதல் விண்வெளித் திட்டம் என்ற வகையில் சாதனை படைத்தது.
இந்த நிலையில் நிலவுக்கு 2022 - இல் ஓர் ஆய்வு வாகனத்தை (ரோவர்) அனுப்ப ஐக்கிய அரபு அமீரகம் திட்டமிட்டுள்ளது. "ரஷீத்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரோவரை ஐக்கிய அரபு அமீரகம் தயாரிக்க உள்ளது.
பத்து கிலோ எடை கொண்ட இந்த ரோவரில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்படும். நிலவின் தரைப் பரப்பில் இந்த ரோவர் ஆய்வில் ஈடுபடும்.
இதை நிலவில் தரையிறக்க " ஐ பேஸ்' என்ற ஜப்பானிய நிறுவனத்துடன் ஐக்கிய அரபு அமீரகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
அமெரிக்காவின் "ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் ஃபால்கன் -9 ராக்கெட் மூலம் இந்த ரோவரை நிலவில் தரையிறக்க "ஐ பேஸ்' திட்டமிட்டுள்ளது. தரையிறங்கிய பின்னர் வயர்லெஸ் தகவல் தொடர்பு உள்ளிட்ட தொழில்நுட்ப உதவிகளையும் ஐ பேஸ் அளிக்கும்.
முதலில் 2020 செப்டம்பரில் இந்தத் திட்டத்தை ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்தபோது, 2024 - க்குள் செயல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தது. இப்போது இரு ஆண்டுகளுக்கு முன் கூட்டியே செயல்படுத்தவுள்ளது.
அமெரிக்காவின் ஃபுளோரிடாவிலிருந்து ராக்கெட் மூலம் செலுத்தப்பட உள்ள இந்த ரோவர், நிலவில் இதுவரை அறியப்படாத இடத்தில் தரையிறக்கப்படும் என ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.
"ரஷீத்' ரோவர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கும் பட்சத்தில் நிலவின் தரைப்பரப்பில் விண்கலத்தை இறக்கிய அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளின் வரிசையில் ஐக்கிய அரபு அமீரகமும் இணைய உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனிநபரின் சக்தியைக் காட்டுங்கள்: வசந்த் ரவி

முர்ஷிதாபாத் கலவரம்: ஆட்சியரிடம் அறிக்கை கோரும் தேர்தல் ஆணையம்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 1 மணி நிலவரம்! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 62.18% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


