தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ஸ்கிப்பிங் விளையாடி கின்னஸில் இடம்பிடித்த ரோபோ!

ஸ்கிப்பிங் விளையாடி உடல் ஆரோக்கியத்தை மனிதர்கள் மேம்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால், ஜப்பானில் ஒரு ரோபோ ஸ்கிப்பிங் விளையாடி கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. 

News image
Updated On :15 நவம்பர் 2017, 12:23 pm

ஸ்கிப்பிங் விளையாடி உடல் ஆரோக்கியத்தை மனிதர்கள் மேம்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால், ஜப்பானில் ஒரு ரோபோ ஸ்கிப்பிங் விளையாடி கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. 
ரோபோக்களுக்கு பெயர் போன ஜப்பானில் , 60 நொடிகளில் 160 ஸ்கிப்பிங் செய்து உலக சாதனை படைத்துள்ளது "ஜம்பின்' என பெயரிடப்பட்டுள்ள ரோபோ. 
பார்ப்பதற்கு பென்குவினைப்போல் உள்ள இந்த ரோபோவின் இரு புறத்தில் இருந்து இரண்டுபேர் ஸ்கிப்பிங் கையிறை 360 டிகிரி சுற்றினர். ஸ்கிப்பிங் கயிறு சுற்றுவதற்கேற்ப, துல்லியமாக எகிறிக் குதித்து சாதனைப் படைத்துள்ளது.
ஏராளமானோர் அரங்கத்தில் கூடி, பெரிய திரையில் ஜம்பினின் ஒவ்வொரு ஸ்கிப்பிங் தாண்டுதலையும் கண்டு ரசித்தனர். ஜம்பின் ரோபோவின் சுட்டித்தனத்தைக் கண்ட அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கிப் போயினர்.
ஜப்பான் தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் கீழ் இயங்கும் நாரா கல்லூரி இந்த ஜம்பின் ரோபோவை உருவாக்கியுள்ளது. 
கின்னஸ் சாதனையில் ஜப்பானைச் சேர்ந்த ரோபோ இடம் பெறுவது இது முதல் முறையல்ல. 2010-ஆம் ஆண்டில் ஐ- ஃபாரி என்ற ரோபோ, தம்பதிக்கு திருமணம் நடத்தி வைத்து கின்னஸ் சாதனை படைத்தது. இதையடுத்து, 2015-ஆம் ஆண்டு 
ஃபோர்பியஸ் என்ற ரோபோ டேபில் டென்னிஸ் பயிற்சியாளராகி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது. தற்போது, சுட்டி ரோபோ ஜம்பின் ஸ்கிப்பிங் ஆடி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.