மலரும் முன் உதிர்ந்த தாவரவியல் விஞ்ஞானி!
சிலர் தங்கள் வாழ்நாளில் அரும்பெரும் சாதனைகளைச் செய்து செல்கின்றனர். சிலரோ சாதனைகள் புரியும் தகுதி இருந்தும் அதற்கான வாய்ப்பும் காலமும் அவர்களுக்கு முழுமையாக அமைவதில்லை. அத்தகைய நிலையிலும் அவர்கள் செய்த பணிகள், காலம் கடந்தும் வாழ்கின்றன.









