ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

சுருக்கெழுத்து படியுங்கள்!

என்னதான் கணினிமயம் என்றாலும் மத்திய அரசைப் பொறுத்தவரை சுருக்கெழுத்து படித்தவர்கள இன்றும் தேவைப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இது குறித்து ஓய்வு பெற்ற தொலைத் தொடர்புத்துறை இயக்குநர் (பாராளுமன்றம்) என்.எம்.பெருமாள் நம்மிடம் கூறியதிலிருந்து:

Updated On :22 பிப்ரவரி 2016, 4:40 pm

என்னதான் கணினிமயம் என்றாலும் மத்திய அரசைப் பொறுத்தவரை சுருக்கெழுத்து படித்தவர்கள இன்றும் தேவைப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இது குறித்து ஓய்வு பெற்ற தொலைத் தொடர்புத்துறை இயக்குநர் (பாராளுமன்றம்) என்.எம்.பெருமாள் நம்மிடம் கூறியதிலிருந்து:

""மத்திய அரசின் உயர் அதிகாரிகளுக்கு உதவியாளர்களாக (Personal Assistant) சுருக்கெழுத்துப் படித்தவர்கள் ஆண்டுதோறும் அதிக அளவில் தேவைப்படுகிறார்கள். பிளஸ்-2 படித்துவிட்டு உயர்நிலைத் தட்டச்சும், இளநிலை சுருக்கெழுத்தும் (Short Hand Lower) படித்த இளைஞர்களுக்கு மத்திய அரசிலும், அதைச் சார்ந்த பல்துறை நிறுவனங்களிலும் வேலைகள் காத்திருக்கின்றன. இதோடு பட்டப் படிப்பும் படித்திருந்தால் மிக எளிதாக வேலை கிடைக்கும்.

பணியாளர் தேர்வாணையம் ஆண்டு தோறும் பிரிவு-4 (எழ்ர்ன்ல் ஈ) மற்றும் பிரிவு-3 (Group C) ஆகிய நிலைகளில் உள்ள பணிகளுக்கு சுருக்கெழுத்துத் தேர்வுகள் நடத்துகிறார்கள். பிரிவு 4 என்பது தமிழக வருவாய்த்துறையிலுள்ள, வருவாய் ஆய்வாளர் நிலைக்குச் சமமானது. பிரிவு-3 என்பது வட்டாட்சியர் பதவிக்கு இணையானது. கடந்த சில ஆண்டுகளாக நநஇ தேர்வின் மூலம் தேவைப்படும் எண்ணிக்கையில் சுருக்கெழுத்தாளர்கள் கிடைக்கவில்லை என்பது ஆச்சரியமான விஷயம்.

2013ஆம் ஆண்டு நநஇ நடத்திய Group D, Group C தேர்வுகள் மூலம் காலிப்பணியிடங்களை நிரப்ப போதிய நபர்கள் கிடைக்காததால் பல நூறு இடங்கள் காலியாகவே இருந்தன.

Group D (80 words per minute): எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற 24,188 நபர்களில் 8,753 பேர் மட்டுமே குறுக்கெழுத்துத் தேர்வில் (Short Hand  Skill Test) கலந்து கொண்டார்கள்.

Group C (நிமிடத்துக்கு 100 அல்லது 120 சொற்கள்): எழுத்துத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2,496 பேர்களில் 6,96 பேர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள்.

மிகக் குறைந்த போட்டியே உள்ள இத்தேர்வில் மாணவர்கள் கலந்து கொண்டால் தாசில்தார் Rank (Group C). அல்லது R.I. Rank (Group D)  பணிகள் உடனடியாகக் கிடைக்கும். 2013இல் நடந்த தேர்வில் Group இல் 106  இடங்களுக்கு 22 பேர் மட்டுமே தகுதி பெற்றார்கள். Group D  இல் 1,486 இடங்களுக்கு 1,131 பேர் மட்டுமே தகுதி பெற்றார்கள் என்பது வருத்தப்படக் கூடிய விஷயம்.

எனவே, நிரந்தரமாக மத்திய அரசில் வேலை வேண்டுமென்றால் உயர்நிலை சுருக்கெழுத்தினைக் கற்றால் போதும். ஆங்கிலச் சுருக்கெழுத்தின் வேகம் நிமிடத்திற்கு 160 சொற்கள் இருந்தால் பாராளுமன்ற செய்தியாளர்களாக கூட (Parlimentary Reporter) நீங்கள் ஆகலாம். ஓரு மாவட்ட ஆட்சியாளரின் ஊதியத்துக்கு இணையான ஊதியத்தைப் பெறுவதற்கும் வாய்ப்புகள் உண்டு.

இந்தியா முழுமைக்கும் இலட்சக் கணக்கான இளைஞர்கள் பட்டங்களைக் கையில் வைத்துக் கொண்டிருந்தாலும் வேலைகளுக்குத் தேவையான திறமைகளை வளர்த்துக் கொள்ளவில்லை என்பது நிதர்சனமான உண்மை. இதைத் தவிர்க்க சுருக்கெழுத்து திறனை வளர்த்துக் கொண்டால் வாழ்க்கை நம் வசப்படும்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.