எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் இயந்திர இயக்கி, இளநிலை புத்தகம் கட்டுநர், இளநிலை கம்மியர், இளநிலை மின்வினைஞர், உதவி வெப்ஆப்செட் டெக்னீஷியன், ஆப்செட் மெஷின் டெக்னீஷியன் மற்றும் உதவி ஆப்செட் மெஷின் டெக்னீஷியன் ஆகிய தொழில்நுட்பம் சார்ந்த பணியிடங்களுக்கு செய்தித்தாள்அறிவிப்பின் அடிப்படையில் ஏற்கெனவே விண்ணப்பித்துள்ளவர்களுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகங்களினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளவர்களுக்கும் சென்னையில் 09.01.2016 அன்று காலை 10.00மணி முதல் பிற்பகல் 1.00மணி வரை எழுத்துத்தேர்வு நடைபெறவுள்ளது.
தேர்வு தொடர்பான தகவல்கள்: எழுத்துத் தேர்வு பத்தாம் வகுப்பு கல்வித்தகுதியின் அடிப்படையில் அமைந்த பொதுஅறிவு சார்ந்ததாகும்.
மேற்குறிப்பிட்ட ஏழு பதவிகளுக்கும் ஒரே ஒரு எழுத்துத்தேர்வு மட்டுமே நடத்தப் பெற உள்ளது.
ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பித்திருப்பினும் ஒரு தேர்வு மட்டுமே எழுத அனுமதிக்கப்பட்டு அதற்கான நுழைவுச்சீட்டு அனுப்பப்படும்.
ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தனியர் எழுத்துத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், தனியர் விண்ணப்பித்த அனைத்து பதவிகளுக்கும் பொருந்தும்.
எழுத்துத்தேர்வில் ஒவ்வொரு பதவிக்கும் இனசுழற்சி அடிப்படையில் அதிக மதிப்பெண் (Highest score) பெறும் நபர்கள் (ஒரு பணியிடத்திற்கு ஐந்து நபர்கள் வீதம்) நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
அவ்வாறு நேர்காணலுக்கு அழைக்கப்படும் நபர்களுக்கு எழுத்துத்தேர்வில் பெற்ற மதிப்பெண் (ம) நேர்காணலில் பெறும் மதிப்பெண் ஆகிய இரண்டும் கணக்கில் கொள்ளப்பட்டு அதிக மதிப்பெண் (Highest score) பெறுபவர்களுக்கு இனசுழற்சி அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் பள்ளி குறித்த விவரங்கள் அடங்கிய நுழைவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியே அனுப்பப்படும்.
எழுத்துத் தேர்வுக்காக விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படும் பள்ளியின் விவரங்கள் இத்துறையின் இணையதள முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.
முகவரி: http:www.stationaryprinting.tn.gov.in
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு: போக்குவரத்து நெரிசல்
சிறுமிக்கு பாலியல் தொல்லை: 3 போ் கைது
முற்றுப்புள்ளி விழ வேண்டும்!
நெல்லையில் தண்டவாளத்தில் படுத்திருந்த முதியவா் மீட்பு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


