மனிதர்களின் தேவைகளை அறிந்து பல்வேறு தகவல் தொழில்நுட்ப சேவைகளைச் செயல்படுத்த செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உதவுகிறது.
இதன் ஆக்கபூர்வ பயன்பாட்டைத் தாண்டி, அவதூறு பரப்பும் சாதனமாக மாறியுள்ளது.
இதனால் எந்த விடியோ உண்மை, எது பொய்யானது என்பதைக் கண்டுபிடிக்கப் பயன்பாட்டாளர்களால் முடிவதில்லை.
விடியோ சேவைகளை வழங்கி வரும் யூடியூப் நிறுவனம், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் பூரண பலன் அளிக்கவில்லை.
இந்நிலையில், செயற்கை நுண்ணறிவின் மூலம் உருவாக்கப்பட்ட பொய்யான விடியோவைக் கண்டுபிடிக்கும் லைக்னஸ் என்ற சேவையை அனைத்துப் பயன்பாட்டாளர்களுக்கும் யூடியூப் வழங்க உள்ளது.
யூடியூப் ஸ்டுடியோவில் உள்ள லைக்னஸ் சேவையில் உங்களின் உண்மையான முகபாவங்களையும், குரலையும் பதிவு செய்துவிட்டால், ஏஐ மூலம் சிறு விடியோக்களை உருவாக்க உதவும். இதில் தற்போது டிடக்ஷன் என்ற புதிய சேவை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சேவை முதலில் பிரபலங்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் இது அரசு அதிகாரிகளுக்கும், குறிப்பிட்ட பத்திரிகையாளர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது அதிகரித்து வரும் போலி விடியோக்களைக் கண்டறிய இது 18 வயதுக்கு உள்பட்ட அனைத்துப் பயன்பாட்டாளர்களுக்கும் விரிவாக்கம் செய்ய யூடியூப் முன்வந்துள்ளது.
இதைப்பயன்படுத்த யூடியூப் ஸ்டூயோவில் கன்டென்ட் டிடிக்ஷன் - லைக்னஸ் தேர்வு செய்து, அதைப் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொண்டு, சந்தேகமுள்ள விடியோவின் உண்மைத் தன்மையை அறியலாம். பொய்யானதாக இருந்தால், அதை நீக்க வலியுறுத்தலாம்.
-அ.சர்ப்ராஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









