செயற்கை நுண்ணறிவு- அக்கினி பாரதி; பக். 140; ரூ. 150; கனவுத்தமிழ் பதிப்பகம், சென்னை- 600 131, ✆ 98403 21522.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகெங்கிலும் பல்வேறு துறைகளில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது என்பதை மறுக்க முடியாது. அந்தத் தொழில்நுட்பம், அதைப் படிப்பதில் உள்ள நன்மைகள், செயற்கை நுண்ணறிவு குறித்த அச்சம் உள்ளிட்டவை குறித்து நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.
மிக வேகமாக வளர்ந்து வரும் இந்தத் தொழில்நுட்பம், நவீன வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்கள் மற்றும் மாற்றங்களை ஏற்படுத்துவதாக இருந்தாலும், உலகம் முழுவதும் 30 கோடி பேர் முழுநேரமாக செய்து வரும் பணிகளை இந்தத் தொழில்நுட்பம் முற்றிலுமாக மாற்றியமைத்து, அந்தப் பணிகள் அனைத்தும் இயந்திரமயமாகும் என்று அமெரிக்க ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மனிதர்களின் வேலையை இந்தத் தொழில்நுட்பம் பறித்துக்கொள்ளுமோ என்ற அச்சத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.
அதேவேளையில், உலகிலேயே முதல்முறையாக முற்றிலும் இந்தத் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் மருத்துவமனையை சீனா அறிமுகப்படுத்தி, மருத்துவ சேவையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இந்தியாவிலும் முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு ரத்தப் பரிசோதனை தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டு ஊசி இல்லாமல், ரத்தம் எடுக்காமல் கேமரா முன் முகத்தைக் காட்டுவதன் மூலம் ரத்தப் பரிசோதனை முடிவுகளைப் பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் வீச்சை எடுத்துரைக்கிறது.
12-ஆம் வகுப்புக்குப் பிறகு செயற்கை நுண்ணறிவு படிப்புக்கான சிறந்த கல்லூரிகள், கட்டணம் குறித்து நூலில் விவரிக்கப்பட்டுள்ளது பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐஐடி) 5 செயற்கை நுண்ணறிவுப் படிப்புகளை இலவசமாக அறிமுகப்படுத்தியுள்ளது. அது குறித்து நூலில் இடம்பெற்றுள்ள தகவல் மூலம் மாணவர்கள் மட்டுமின்றி, பணிபுரியும் தொழில் வல்லுநர்களும் பயனடையலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










