தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

புகழ் பெற்ற புத்தகக் கடைகள்!

இணையம் வந்தாலும் புத்தகங்களுக்கான மவுசு குறையவில்லை.

News image

ஹிக்கின் பாதம்ஸ்

Updated On :24 மே 2026, 4:12 am IST

இணையம் வந்தாலும் புத்தகங்களுக்கான மவுசு குறையவில்லை. கரங்களில் கைப்பேசிகள் இருந்தாலும், புத்தகங்களோடு பயணிப்போரும் உண்டு. பலர் நூலகங்களையே வாழ்விடமாகக் கொண்டுள்ளனர். இவர்களுக்கெல்லாம் முக்கிய தேவை புத்தகங்கள் விற்கும் கடைகளாகும். நாட்டில் உள்ள பிரபலமான புத்தகக் கடைகள் சில:

கிதாப் கானா, மும்பை

பீம் ப்ளோரா பவுண்டனுக்கு அருகில் 'சோமையா பவன்' என்ற பழைய அழகான கட்டடத்தில் 150 ஆண்டுகள் பழமையான இந்தக் கடை அமைந்துள்ளது. பெரியவர்கள், சிறியவர்கள் என இருவருக்கும் புத்தகங்கள் உள்ளன. இங்கு வாங்கவும் முடியும்; படிக்கவும் முடியும். ஆங்கிலம், ஹிந்தி, குஜராத்தி, மராத்தி புத்தகங்களும் உள்ளன.

எந்தப் புத்தகம் வெளியிடப்பட்டாலும் இந்தப் புத்தகக் கடையில் எளிதாக வாங்கலாம் என்பதால், இந்தக் கடையை 'புத்தகப் பிரியர்களின் சொர்க்கம்' என்று அழைக்கின்றனர். கடையின் பின்புறத்தில் உள்ள உணவகத்தில் இத்தாலிய உணவு, சூடான சாக்லெட்ஸ், சாண்ட்விச்கள், நியூயார்க் சீஸ் கேக் உள்ளிட்டவை கிடைக்கும்.

ஹிக்கின் பாதம்ஸ், சென்னை

சென்னை அண்ணா சாலையில் எல்.ஐ.சி.க்கு எதிரே அமைந்துள்ள இந்தக் கடை 1844-இல் தொடங்கப்பட்டது. அனைத்து வகையான நாவல்கள், கல்வி சார்ந்த நூல்கள், பல மொழி நூல்கள், ஆன்மிக, குழந்தைகளுக்கான நூல்கள் இங்கு கிடைக்கும். 1875-ஆம் ஆண்டிலேயே 'ராயல் புக் செல்லர்' என்ற விருது இந்தக் கடைக்குக் கிடைத்தது. அந்த தரத்தை இன்று வரை பராமரித்து வருகிறது.

ஆக்ஸ்போர்ட் புத்தகக் கடை, கொல்கத்தா

பார்க் தெருவில் உள்ள இந்தக் கடை 1919-இல் துவங்கப்பட்டது. புத்தக வெளியீடுகள், கலந்துரையாடல்கள், கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்டவையும் நடைபெறும். இங்குள்ள உணவகமும் சிறப்புடையது. இங்கு புத்தகங்களைவிட 'பேப்பர் பேக்', ஹார்ட்பவுண்ட், கலை நயமுடைய காபிடேபிள் புத்தகங்கள் போன்றவை பிரபலமானவை.

பக்ரிசன்ஸ் புத்தகக் கடை, புதுதில்லி

ரவீந்திர நகர் கான் மார்க்கெட் பகுதியில் 1953-இல் தொடங்கப்பட்டது. இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையின்போது, பாகிஸ்தானில் இருந்து அகதியாக வந்த ஒருவர் இந்தக் கடையைத் தொடங்கினார். ஐம்பதுக்கும் மேற்பட்ட வகைகளில் புத்தகங்கள் இங்குள்ளன.

கேம்பிரிட்ஜ் புத்தகக் கிடங்கு, முசோரி, உத்தரகண்ட்

முசோரியில் மால் சாலையில் உள்ள இந்தக் கடை 1953-இல் தொடங்கப்பட்டது. பிரபல எழுத்தாளர் ரஷ்கின் பான்ட் ஒவ்வொரு சனிக்கிழமையும் பிற்பகலில் இங்கு வந்து புத்தகம் வாங்குபவர்களுக்கு ஆட்டோகிராப் போடுவது வழக்கம்.

குல்ஷன் புக்ஸ், ஸ்ரீநகர்

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள இந்தக் கடை சிறியது. இருந்தாலும், ரெசிடென்சி சாலை, டால் ஏரி நேரு பூங்காவில் உள்ள இதன் இரு கிளைகள் பிரபலமானவை. டால் ஏரி கிளையில் காபி, நூலகமும் கூடுதலாக உண்டு. இது மிதக்கும் புத்தகக் கடை. லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. கடைக்குச் செல்ல படகு வசதி உண்டு.

பிளாசம் புக்ஸ், பெங்களுரு

சர்ச் சாலையில் உள்ள இந்தக் கடையில் இல்லாத புத்தகங்களே இல்லை எனலாம். இங்கு புதிய, பழைய புத்தகங்கள் அனைத்து

வயதினருக்கும் ஏற்ற புத்தகங்கள் உள்ளன. இந்தக் கடையில் பழைய புத்தகங்களை விற்று, அந்த விலையில் புதிய புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.