திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கத்திகளின் வனம்

மடகாஸ்கரில் அமைந்துள்ள கினிவஸ் வனம் சவரக்கத்தி போன்ற கூர்மையான சுண்ணாம்பு ஊசிப் பாறைகளால் ஆனது.

News image
Updated On :10 மே 2026, 4:14 am IST

மடகாஸ்கரில் அமைந்துள்ள கினிவஸ் வனம் சவரக்கத்தி போன்ற கூர்மையான சுண்ணாம்பு ஊசிப் பாறைகளால் ஆனது. கரடுமுரடான இந்த வனத்தில், மனிதர்களால் வெறும் காலுடன் நடக்க முடியாது. அபாயகரமான, அதிக பாறை சிகரங்களைக் கொண்ட இந்தத் தீவு நாட்டில் மூன்றில் ஒரு பங்கு வனப்பகுதியைக் கொண்டது.

இந்தப் பகுதி சுண்ணாம்புப் பாறைகள், அரிப்பு, வானிலை சிதைவுகளால் செதுக்கப்பட்டு மாயத் தோற்றத்தையும் வேறொரு உலகத்தையும் சார்ந்தது போன்ற நிலப் பரப்பை உருவாக்கியுள்ளன. வானுயர்ந்த சிகரங்கள், கூர்மையான விளிம்புகளைக் கொண்ட செங்குத்தான பாறைகள், சிக்கலான குகைகள் என ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து ஒரு கற்பனை உலகத்திலிருந்து நேராக வந்தவாறு வியப்பை அளிக்கும் காட்சிகளை அளிக்கிறது.

பூமியில் வேறு எங்கும் காணப்படாத தாவரங்கள், உயிரினங்கள் இங்கு வசிக்கின்றன. கத்தி காட்டில் மிகவும் வசீகரிக்கும் ஓர் அம்சமான ஒளி, நிழல்களின் நடனம் உள்ளது.

குறுகிய இடைவெளிகள், பிளவுகள் வழியாக ஒளிக்கதிர்கள் ஊடுருவிச் செல்லும்போது அவை நிலப்பரப்பை ஒளிரச் செய்து, சிக்கலான கோலங்களை உருவாக்குகின்றன.

இந்த வனம் வழியாக பயணிப்பதே சுகம்தான். வளைந்து நெளிந்த பாறைகள், குறுகிய பள்ளத்தாக்குகள், மறைந்திருக்கும் குகைகள், ஒவ்வொரு திருப்பமும் ஒரு புதிய காட்சியை சுற்றுலாப் பயணிகளுக்கு அளிக்கும். மலை ஏறுபவர்களுக்கு 'த்ரில்' பயணம் உண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.