உலகில் வியக்க வைக்கும் வகையில் பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகளும், ருசிகரமான தகவல்களும் உள்ளன. அவற்றில் சில:
இந்தியாவில் பிரபலமாக உள்ள கசகசாவை அரபு நாடுகளுக்கு எடுத்துச் செல்ல முடியாது. அதை அங்கு வைத்திருப்பதே தண்டனைக்குரியதாகும். சில நாடுகளில் தலைவலி, வயிற்றுவலிக்கான மாத்திரைகளைக் கூட வைத்திருக்கக் கூடாது என்ற விதிமுறைகள் உள்ளன.
இந்தியாவின் முதல் சாக்லேட் தயாரிப்பு நிறுவனமான பார்லே 1929இல் தொடங்கப்பட்டது. அதன்பின்னர் இங்கு பிஸ்கட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.
சிங்கப்பூரில் யாருக்கும் கடிகாரத்தை அன்பளிப்பாக வழங்கக் கூடாது. இது மரணத்தை நினைவுபடுத்துவதாக அவர்கள் கருதுகின்றனர்.
உலகின் மிக நீளமான இயற்கைக் கடற்கரையாக வங்கதேசத்தின் 'காக்ஸ் பஜார் கடற்கரை'யானது அறியப்படுகிறது. இங்குள்ள ஸ்போனி பாயின்ட் என்ற இடம் கடற்கரையின் மற்றொரு பிரபலமான பகுதியாகும். இங்கு குதிரைச் சவாரி, படகுச் சவாரிகள் பிரபலம்.
பிரிட்டனில் தேசியக் கொடியை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அது அவமதிப்பாகவோ, குற்றமாகவோ கருதப்பட மாட்டாது. அந்த நாட்டு மக்கள் தேசியக் கொடியால் மேலாடைகள், நீச்சல் உடைகளைக் கூட தைத்துக் கொள்கின்றனர்.
ரஷியாவுக்கு அடுத்தபடியாக வைர உற்பத்தியில் இரண்டாமிடம் வகிக்கிறது போட்ஸ்வானா. இங்குள்ள ஜ்வானெங், ஒராபா ஆகிய வைரச் சுரங்கங்களில் உயர்தரத்திலான வைரங்கள் உள்ளன.
இயற்கை வளங்களைக் கொண்ட 'காங்கோ' நாட்டில், கசாய் பகுதியில் உள்ள சுரங்கம் வைர உற்பத்தியில் முக்கியப் பங்கை வகிக்கிறது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் 1850இல் 'ஹார்ப்பர்ஸ் மாகஸின்' என்ற பெயரில் அறுவடையாளர்களுக்காகத் தொடங்கப்பட்ட பத்திரிகை இன்றும் வெளிவருகிறது. 3.44 லட்சம் பிரதிகள் விற்பனையாகிறது.
தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள 'நவ்ரூ' எனும் தீவு நாட்டுக்கு அதிகாரபூர்வமான தலைநகரமே இல்லை. 21 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்ட இந்த நாடு உலகில் தலைநகரமே இல்லாத ஒரே குடியரசு நாடாகும். இங்கு பவளப் பாறைகள், வெள்ளை மணல் கடற்கரைகள் உள்ளன.
நியூசிலாந்தில் வெறுங்கையில் புதிய காய்கறிகள், பழங்கள், தேன், இறைச்சி ஆகியவற்றை எடுத்துச் சென்றால் குற்றமாகும். அதையும் மீறி எடுத்துச் சென்றால், காவல் துறையினரால் அவை பறிமுதல் செய்யப்படுகின்றன.
'பறக்கும் டாக்சி' எனும் புதிய தொழில் நுட்பம் சிங்கப்பூர், துபை போன்ற நாடுகளில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
கோட்டாறு ஆ.கோலப்பன்
அண்டோரா நாட்டில் அரசியல் கட்சிகளோ, பத்திரிகைகளோ கிடையாது. கடிதங்களுக்கும் அஞ்சல் தலை ஒட்ட வேண்டியதில்லை. வருமான வரியும் கிடையாது. நீதிமன்றங்கள் இல்லை. படிப்பறிவு இல்லாதவர்களும் மிகவும் குறைவு.
ஒவ்வொரு மனிதனும் தினமும் சராசரியாக 30 ஆயிரம் வார்த்தைகள் பேசுகிறான். நிமிடத்துக்கு 15 சொற்களையும், மணிக்கு 900 சொற்களையும் பேசுகிறான். மொத்தமாகப் பார்த்தால் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் பேசுகிறான் என்று ஆய்வு ஒன்றின் முலம் தெரியவந்துள்ளது.
நெ.இராமகிருஷ்ணன், பொழிச்சலூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி நிலவரம் - கெங்கவல்லி! வெற்றிக்கு மல்லுக்கட்டும் திமுக-அதிமுக!

20 ஆண்டுகால கனவுத் திட்டம்!நான்குனேரி சிறப்பு பொருளாதார மண்டலம் உயிா்பெறுமா?

வள்ளுவரின் புகழ்பாடும் கோயில்...

தேர்தல் நடத்தை விதிமுறைகளில் எவை தளர்த்தப்பட வேண்டும் என்பது குறித்து... வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


