திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வெந்து தணிந்தது வீடு

கதை நடக்கும் இடம் மட்டுமல்ல சம்பவங்கள், வசனங்கள் மூலம் கதை நடக்கும் காலமும் சில கதைகளில் உணரப்படுவது சிறப்பு.

News image
Updated On :18 மே 2026, 6:41 pm IST

வெந்து தணிந்தது வீடு - சித்ரூபன்; பக். 192, ரூ. 250, சுவாசம் பதிப்பகம், சென்னை -600 127, ✆ 81480 66645.

கதை சொல்வது மரபு ரீதியான ஒன்று. மனிதன் தன் அனுபவங்களை அடுத்தவர்க்கும், அடுத்த தலைமுறையினர்க்கும் சொல்வதையே கதை என்கிறோம்.

சித்ரூபனின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பாக வெளிவந்துள்ள இந்நூலில் பல்வேறு வார, மாத இதழ்களில் பிரசுரமான அவரது 16 கதைகள் இடம் பெற்றுள்ளன. அதில் ஒரு கதையின் தலைப்பே தொகுப்புக்கும் வைக்கப்பட்டுள்ளது.

'தோழரின் தோழி' என்ற சிறுகதையில் பரசுராமர் என்பவரின் தொழிற்சங்க ஈடுபாடும், மனிதாபிமானமும், அவரது காதலும் நல்ல முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

'காசி யாத்திரை' சிறுகதை, சுமங்கலி என்ற பெண்மணி குறித்து, உணர்வுபூர்வமாக காசியின் பின்னணியில் சொல்லப்பட்டுள்ளது.

இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகளில் மகுடமாகத் திகழ்கிறது, 'இலக்கிய விபத்து' என்ற சிறுகதை. அது ஃபேஸ்புக்கிலும், குழுக்களிலும் சிறுகதைகளை எழுதிவரும் சித்குப்தன் என்ற எழுத்தாளர் குறித்த கதை. இன்றைய ஃபேஸ்புக் எழுத்தாளர்களின் மன ஓட்டத்தைப் படம் பிடித்துக் காட்டுவது போல் கதையின் ஆரம்பமும் முடிவும் எழுதி இருக்கும் விதமும் மிகவும் ரசிக்க வைக்கிறது.

இதில் உள்ள ஒவ்வொரு சிறுகதையும் வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு காலங்களில் நடப்பதாக உள்ளது. சில கதைகள் சிறுகதை இலக்கணத்தில் அடங்காமல் இருந்தாலும் நல்ல கதைகளே. கதை நடக்கும் இடம் மட்டுமல்ல சம்பவங்கள், வசனங்கள் மூலம் கதை நடக்கும் காலமும் சில கதைகளில் உணரப்படுவது சிறப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.