கன்னடப் படமான "ஒந்து கதை ஹெல' மூலம் அறிமுகமாகி தெலுங்கில் நானியுடன் ஜோடி சேர்ந்து "கேங் லீடர்' படம் மூலம் அறிமுகமானவர் "பார்பி டால்' என்று சொல்லப்படும் பிரியங்கா மோகன்.
பிரியங்காவுக்கு வயது 28 என்று சொல்ல முடியாத உடல்வாகு. அப்பா தமிழ்நாட்டுக்காரர். அம்மா கர்நாடகத்தைச் சேர்ந்தவர். படித்தது வளர்ந்தது பெங்களூரில்; பயோடெக்னாலஜியில் பி.டெக். பட்டம் பெற்றதும் நடிக்க வந்துவிட்டார்.
தமிழில் சரளமாகப் பேசும் பிரியங்கா, நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் ஜோடியாக "டாக்டர்' படத்தில் அறிமுகமானார்.
பிரியங்காவின் இரண்டாவது தமிழ் படம் "எதற்கும் துணிந்தவன்'. பிரியங்கா சூர்யாவின் ஜோடி. மூன்றாவது படம் "டான்'. சிவகார்த்திகேயனுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்தார் பிரியங்கா.
தமிழுக்கு சில்லென்று புதிய காற்றாய் பிரியங்கா மோகனை அறிமுகம் செய்ததற்காக ரசிகர்கள் இயக்குநர் நெல்சனுக்கு நன்றி சொல்ல, பிரியங்கா யாருக்கு நன்றி சொல்கிறார் தெரியுமா ?
பிரியங்காவே கூறும்போது, ""அப்போது நான் தெலுங்குப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் என்னைப் படம் பிடித்து அவரது வலைதளப் பக்கத்தில் பதிவிட, அதைப் பார்த்த சிவகார்த்திகேயன் அவர் நண்பரும் இயக்குநருமான நெல்சனிடம் காண்பித்தார். பின்னர், "டாக்டர்' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன்'' என்கிறார்.
பிரியங்கா நடித்திருக்கும் மூன்று தமிழ் படங்களிலும் சரி. தெலுங்கு, கன்னடப் படத்திலும் சரி. "தனக்கும் கவர்ச்சிக்கும் தூரம் அதிகம்' என்று சொல்லும் விதத்தில் அடக்கம் ஒடுக்கமாக பிரியங்கா நடித்திருந்தார்.
ரஜினியின் அடுத்த படமான "ஜெயிலர்' படத்தில் இயக்குநர் நெல்சன், தான் அறிமுகம் செய்துவைத்த பிரியங்காவை ரஜினியின் மகளாக நடிக்க வைப்பார் என்று சொல்லப்பட்டாலும் பிரியங்கா மோகன் நடிக்கவில்லை.
"பீஸ்ட்' படம் வெளியானதைத் தொடர்ந்து படத்தின் இயக்குநர் நெல்சன் தனது குடும்பத்துடன், நண்பர்கள் நடிகர் கவின், ரெட்டின் கிங்ஸ்லி, சுனில் ஆகியோருடன் பிரியங்கா துபாய்க்கு சுற்றுலா சென்றுவந்தார்.
பிரியங்கா, அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் "கேப்டன் மில்லர்' படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். "ஒரு கல் ஒரு கண்ணாடி', "சிவா மனசுல சக்தி' என்ற படங்களை இயக்கிய எம்.ராஜேஷ் இயக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா நடிக்க உள்ளார். ஆக இரண்டே இரண்டு தமிழ் படங்கள்.
அதனால் என்னவோ? பிரியங்கா, இதர இளம் நடிகைகள் செய்வது போல கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருவது பிரியங்காவின் ரசிகர்களை திகைக்க வைத்திருக்கிறது. தமிழில் பிசி நடிகையாக மாற பிரியங்கா "இது கவர்ச்சியின் தொடக்கம்தான்' என்று சொல்லாமல் சொல்கிறாரோ பாதை மாறும் பிரியங்கா !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையில் 1 மணி வரை 54.58% வாக்குப்பதிவு!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 1 மணி நிலவரம்! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 41.11% வாக்குப்பதிவு- நேரலை

மேற்கு வங்கம்: பிற்பகல் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


