பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

திரைக்கதிர்

இயக்குநர் பாபி கொல்லி  இயக்கத்தில் தயாராகி வரும் புதிய படம் "வால்டேர் வீரய்யா'.

News image
Updated On :20 நவம்பர் 2022, 12:30 am

இயக்குநர் பாபி கொல்லி இயக்கத்தில் தயாராகி வரும் புதிய படம் "வால்டேர் வீரய்யா'. இதில் சிரஞ்சீவி கதையின் நாயகனாக நடிக்கிறார். அண்மையில் இப்படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் படத்தை பற்றிய புதிய தகவலை இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தன்னுடைய இணைய பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். "சிரஞ்சீவி, ஊர்வசி ரெளத்லா இணைந்து கலக்கியிருக்கும் பாடலின் லிரிக்கல் வீடியோ இந்த வாரம் வெளியிடப்படும்'' என பதிவிட்டிருக்கிறார்.

-------------------------------------------

கொஞ்ச காலம் முன்பு லாபத்தில் நஷ்டமாக சிவகார்த்திகேயனுக்கு இருந்தது. இப்போது "டான்' படத்திற்குப் பிறகு அந்த நிலைமை முற்றிலும் சீராகிவிட்டது. சோனி முதன்முதலில் தயாரிக்கும் படத்தில் அவர் இடம் பெற்று விட்டார். அவரே எதிர்பார்க்காத தொகையை அட்வான்ஸாக கொடுத்ததால் சிவகார்த்திகேயன் ஆச்சரியப்பட்டார். சாய்பல்லவியோடு அவருக்கு நட்பு இருப்பதால் அவருடன் தற்போது நடன பயிற்சி பெற்று வருகிறார்.

-------------------------------------------

ரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பாக சிவபிரகாஷ் மற்றும் கேப்டன் எம். பி.ஆனந்த் இணைந்து தயாரித்து வரும் படம் "பாண்டிய வம்சம்'. இப்படத்தின் கதை, திரைக்கதை, எழுதி, இயக்கி நடித்துள்ளார் சிவபிரகாஷ். இதில் நாயகியாக ரக்ஷிதாமற்றும் ஆலியா ஹயாத் நடிக்கின்றனர். மனோஜ் குமார், விஜயகுமார், போஸ் வெங்கட் மற்றும் குட்டி புலி சரவணன், சக்தி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கிராமத்தில் உள்ள அரசியலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல் மட்டுமல்லாது தமிழ் சமுதாயத்துக்குத் தேவையான சில முக்கிய விஷயங்களையும் பதிவு செய்துள்ளோம் என்கிறார் இயக்குநர்.

-------------------------------------------

முன்பு சிம்புவுக்கு இருந்த கெட்டப் பெயர் இப்போது விஷாலுக்கு ஒட்டிக்கொண்டுவிட்டது. விஷால் இப்போது நடித்து வரும் "மார்க் ஆண்டனி' படப்பிடிப்புக்கு அவர் வராமல் இழுத்தடிப்பதாகவும், இதனால் பல நாட்கள் படப்பிடிப்பு தள்ளிப்போனதால் தயாரிப்பாளருக்கு பலகோடி ரூபாய் நஷ்டம் எனவும் சொல்கிறார்கள். விஷால் மீது தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் கொடுக்கவும் தயாராகி வருதாக தகவல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.