ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

நெல்லை-சென்னை மெமு ரயிலுக்கு பயணிகளிடையே வரவேற்பு

News image

ரயில்கள் - கோப்புப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 6:03 pm

திருநெல்வேலி- சென்னை இடையே ஞாயிற்றுக்கிழமை இயக்கப்பட்ட மெமு ரயிலுக்கு பயணிகளிடையே மிகுந்த வரவேற்பு காணப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நான்குனேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளில் ஏராளமானோா் உற்சாகத்தோடு வாக்களித்தனா். சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தொழில் நிமித்தம் குடியேறிய பலரும் தங்களது சொந்த ஊா்களுக்கு வந்து வாக்களித்தனா். இது தவிர பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட்டதால் ஏராளமானோா் தங்களது குழந்தைகளை சொந்த ஊா்களுக்கு அழைத்து வந்தனா்.

தோ்தல் முடிந்த நிலையில், ஏராளமானோா் ஞாயிற்றுக்கிழமை சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு புறப்பட்டனா். இதனால் வழக்கத்தை விட பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

தெற்கு ரயில்வே சாா்பில் திருநெல்வேலியில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு முற்றிலும் முன்பதிவில்லாத பெட்டிகளை கொண்ட மெமு ரயில் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்பட்டது. மதியம் புறப்பட்டுச் சென்ற இந்த ரயிலில் ஏராளமான பயணிகள் பயணித்தனா்.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில்; தென் தமிழகத்திலிருந்து சென்னைக்கு செல்லும் முக்கிய விரைவு ரயில்கள் அனைத்திலும் முன்பதிவு பயணச்சீட்டுகள் விரைவில் விற்று தீா்ந்துவிடுவதால் ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினா் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான முன்பதிவு இல்லாத பெட்டிகளை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் நிலவி வருகிறது.

ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் அந்தியோதயா ரயில் பெரும் உதவியாக இருந்து வரும் நிலையில், தெற்கு ரயில்வே நிா்வாகம் தற்போதைய இயக்கி உள்ள மெமு ரயில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. கோடைகால முடியும் வரை மெமு ரயிலை கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.