மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மூச்சுப் பிடிப்பு, முதுகுவலிக்கு சிறந்த மருந்து!

என்னுடைய வயது 47. அடிக்கடி வாயுவினால் ஏற்படக் கூடிய மூச்சுப் பிடிப்பு, முதுகு வலியால் அவதிப்படுகிறேன்.இது எதனால்? என்ன ஆயுர்வேத மருந்து சாப்பிடலாம்?

News image
Updated On :20 மார்ச் 2022, 12:30 am

என்னுடைய வயது 47. அடிக்கடி வாயுவினால் ஏற்படக் கூடிய மூச்சுப் பிடிப்பு, முதுகு வலியால் அவதிப்படுகிறேன்.இது எதனால்? என்ன ஆயுர்வேத மருந்து சாப்பிடலாம்?

விஜய்பிரியன், சேலம்.

உள்ளும் புறமும் எண்ணெய்ப் பசையை என்றென்றும் பாதுகாக்கக் கூடிய உணவும் செயலும் நமக்கிருந்தால், நீங்கள் குறிப்பிடும் வகையிலான உபாதைகள் தோன்ற வாய்ப்பில்லை.உளுந்தும், எள்ளும் எண்ணெய் வித்துகளில் சிறந்தவை. அவற்றை நீங்கள் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவும். தினமும் சிறிது சூடு செய்யப்பட்ட நல்லெண்ணெய்யை உடலில் தேய்த்துவிட்டு பிடித்துவிடும் மசாஜ், உடலுக்கும் தசைநார்களுக்கும் வலுவூட்டும்.

நீங்கள் குறிப்பிடுவது போல ஏற்படக் கூடிய மூச்சுப் பிடிப்பு, மார்பு வலி, விலாப்புறங்கள் வலி, முதுகு வலி, சந்துகள், தசைநார்களில் வலி, வீக்கம், கைகால் வலி முதலிய எல்லாவிதமான வலிகளையும் நிச்சயமாகக் குணப்படுத்தும் வகையிலும், ஸர்வாங்க வாதம், பாரிச வாயு முதலிய எல்லாவிதமான வாத நோய்களையும் குணப்படுத்தக் கூடிய சிறந்த மருந்து இப்போது தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்து நரம்புகள் சம்பந்தப்பட்ட விரல் நடுக்கம், நாக்குக் குளறுதல், கண், காது கோளாறுகள், ஒரு பக்கத் தலைவலி முதலிய கோளாறுகளையும் குணப்படுத்தும் திறன் உள்ளது.

மேலும் பிரசவித்திருக்கும்பெண்களுக்கு வாயுவைச் சீராக்கி, உடம்பைத் தேற்ற வேண்டிய முயற்சியிலும் -வயோதிகர்கள் தினசரி உபயோகித்து வந்தால், வாத ரோகங்களும், வயது முதிர்ச்சியினால் ஏற்படும் நரம்புத் தளர்ச்சியும், புலன்களின் சக்திக் குறைவும் ஏற்படாமல் ஆரோக்கியத்துடன் இருக்கவும்- ரத்த அழுத்தம் என்ற வியாதியைக் குணப்படுத்தவும்,

வராமல் தடுக்கவும் -ஊமைக் காயங்களுக்கும் நிகரற்ற மருந்தைத் தயாரித்து மக்களாகிய நமக்கு எப்படியாவது தந்துவிட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் பண்டைய முனிவர்கள் சேர்ந்து ஆலோசனை செய்து, சித்தாமுட்டி, வில்வவேர் இவற்றைச் சேர்த்துபக்குவம் செய்யப்பெற்றபாலுடன் நெய்த் தெளிவு கலந்து பக்குவம் செய்து தயாரித்துத் தந்துள்ள மருந்து தற்போது தயாரிக்கப்பட்டு விற்பனையில் உள்ளது.

அந்த மருந்தின் பெயர் என்ன? எப்படிச் சாப்பிடுவது? எதனுடன் கலந்து சாப்பிடுவது? எத்தனைநாட்கள் சாப்பிடுவது என்பன போன்ற பல கேள்விகளை நீங்கள் கேட்பது புரிகிறது. என்றாலும், மருந்தின்பெயரை லேபிளாகத் தயாரித்து, பாட்டிலில் ஒட்டி வேறு ஏதாவது கேப்ஸ்யூல்களை உள்ளே வைத்து விற்பனை செய்ய பலரும் காத்திருப்பதால், இங்கு பெயரை எழுத வாய்ப்பில்லை.உங்களுடைய உடல் நலனைக் கருதியேஇந்த கடினமான முடிவை எடுக்க வேண்டியுள்ளது.

வேம்பு, சீந்தில், ஆடாதோடை போன்ற மருந்துகள், வட்டத் திருப்பி, வாய்விளங்கம், தேவதாரு தொடங்கிய இருபத்தியாறு மருந்துகள், சுத்தம் செய்த குக்கில் 5 பலம் என்ற வகையிலும் மருந்தைக் கலந்து காய்ச்சப்படும் மூலிகை நெய் மருந்தை உள்ளுக்குச் சாப்பிட்டால்,பலம் வாய்ந்ததும்,மூட்டுகள், எலும்பு, எலும்புச்சந்து ஆகியவற்றில் பரவியதுமான வாத நோயை நீக்கக் கூடிய சிறந்த நெய் மருந்தும் தற்சமயம் விற்பனையிலுள்ளன.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.