நெய்ப்பு, குளிர்ச்சி, நிலைப்பு போன்ற குணங்களைக் கொண்ட சித்தாமுட்டி எனும் செடியின் வேரைக் கொண்டு கஷாயம் காய்ச்சி, அதே மூலிகை மருந்தின் வேரை கல்கம் எனும் நீர் விட்டு அரைத்து உருண்டை செய்து, நெய்யுடன் அவற்றைக் கலந்து தயாரிக்கப்படும் " பலாமூலக்ருதம்' எனும் நெய் மருந்தை காலை, இரவு உணவுக்குப் பிறகு சாப்பிட்டு, அதன் மேல் சிறிது சூடான தண்ணீர் அருந்துவதால், நெய் மருந்து நன்கு செரிமானமாகி, அதன் குணங்களும் செயல்களும் விரைவாக கழுத்துத் தண்டுவட குருத்து எலும்பு மற்றும் வில்லைகளைச் சென்றடைந்து, தேய்மானத்தைத் தடுத்து உதவுகிறது. மேலும் வில்லைகளுக்குத் தேவையான புஷ்டியை அது ஏற்படுத்துவதால், நல்ல வலி நிவாரணியாகவும் உதவுகிறது.