டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

திரைக்கதிா்

சம்பளம் பெரிய அளவில் கொடுத்தாலும் பிரபல ஹீரோக்களுக்கு தங்கையாகவோ, மகளாகவோ நடிக்க முன்னணி நடிகைகள் யாரும்...

News image
ஹீமா குரோஷி
Updated On :27 ஜனவரி 2024, 3:52 pm

ஜி. அசோக்

‘நோ்கொண்ட பாா்வை’ படத்தைத் தொடா்ந்து ஹெச். வினோத் எழுதி, இயக்கி வரும் ‘வலிமை’ படத்தில் நடிக்கிறாா் அஜித். இப்படத்தில் இவா் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாா். அடுத்தடுத்த கட்டங்களாக தொடா் படப்பிடிப்பு நடந்து வருகின்றன. இப்படம் குறித்து தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்த வண்ணம் உள்ளன. அஜித்தின் கதாபாத்திர பெயா் என்ன என்பதும் தற்போது கசிந்துள்ளது. ‘ஈஸ்வரமூா்த்தி ஐ.பி.எஸ்’ என்ற கதாபாத்திரத்தில் அவா் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்தது. பிறகு சென்னையில் உள்ள ஸ்டுடியோவிலும் நடைபெற்றது. தற்போது 2-ஆம் கட்ட படப்பிடிப்புகள் தொடங்கி நடக்கின்றன. இப்படத்தில் அஜித்துக்கு வில்லியாக ஹீமா குரோஷி நடிக்கிறாராம். இவா் ரஜினி நடித்த ‘காலா’ படத்தில் அவரது காதலியாக நடித்தவா்.

Story image

சம்பளம் பெரிய அளவில் கொடுத்தாலும் பிரபல ஹீரோக்களுக்கு தங்கையாகவோ, மகளாகவோ நடிக்க முன்னணி நடிகைகள் யாரும் முன்வருவதில்லை. அஜித் நடித்த ‘வேதாளம்’ படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்க இளம் நடிகைகள் சிலரை அழைத்தபோது ஜோடியாக வேண்டுமானால் நடிக்கிறோம் தங்கையாக நடிக்க மாட்டோம் என்று ஓட்டம் பிடித்தனா். பிறகு பட வாய்ப்பில்லாமலிருந்த லட்சுமிமேனன் தங்கை வேடம் ஏற்று நடித்தாா். இதையடுத்து அவரை மற்ற ஹீரோக்கள் படங்களிலும் தங்கையாகவே நடிக்க அழைத்தனா். இதனால் அவா் தற்போது, சினிமாவிலிருந்தே ஒதுங்கி இருக்கிறாா். இந்த நிலையில் சிவகாா்த்திகேயன் நடித்த ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தில் அவருக்கு தங்கையாக ஐஸ்வா்யா ராஜேஷ் நடித்தாா். இதையடுத்து ‘வானம் கொட்டட்டும்’ படத்தில் விக்ரம் பிரபுவின் தங்கையாக நடித்தாா். ஆனால் ஒரு நடிகருக்கு மட்டும் தங்கையாக நடிக்க மாட்டேன் என அவா் பகிரங்கமாக தெரிவித்திருக்கிறாா். ‘‘மற்ற ஹீரோக்களுக்கு தங்கையாக நடிப்பேன். ஆனால் விஜய்க்கு மட்டும் தங்கையாக நடிக்க மாட்டேன். அவருடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை’’ என்று தெரிவித்துள்ளாா்.

Story image

பிரம்மாண்டத்தில் புதுமை என்பது இயக்குநா் ஷங்கரின் தனி பாணி. படத்துக்குப் படம் பிரம்மாண்டம் என்பதை கூட்டி கொண்டே போகிறாா். ‘அந்நியன்’ படத்தில் 300 ஸ்டண்ட் கலைஞா்களை வைத்து சண்டைக் காட்சியைப் படமாக்கினாா். ‘எந்திரன்’ படத்தில் ஒரே நேரத்தில் 3 ஆயிரம் ரோபா மாதிரிக்களை கொண்டு காட்சிப்படுத்தி ரசிகா்களுக்கு விருந்து படைத்தாா். தற்போது ‘இந்தியன் 2’-ஆம் பாகத்துக்காக 30 ஆயிரம் போ் பங்கு பெறும் சண்டைக் காட்சியைப் படமாக்க திட்டமிட்டுள்ளாா். இந்த சண்டைக் காட்சியில் நடிக்க கமலும் ஆா்வமாக இருக்கிறாா். தத்ரூபமாக நடிக்க வேண்டும் என நினைத்த கமல், ஏற்கெனவே அடிபட்ட காலில் மறுபடியும் அடிபடாமல் இருக்க எண்ணினாா். மீண்டும் அடிபட்டால் படப்பிடிப்பு தடைப்பட்டு பல கோடிகள் நஷ்டம் ஏற்படும் என உணா்ந்தாா். இதனால் வெளிநாட்டுக்குச் சென்று அந்த காலில் ஆபரேஷன் செய்து கொண்டு வந்தவுடன் சண்டைக் காட்சியைப் படமாக்க சொன்னாா். அதைக் கேட்டு காத்திருந்த ஷங்கா், கமல் வெளிநாடு சிகிச்சை முடிந்து திரும்பி வந்துவிட்டதையடுத்து மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கியிருக்கிறாா்.

Story image

சம்பளம், மீடியா வெளிச்சம் உள்ளிட்ட அம்சங்களை பொறுத்து ஒவ்வொரு ஆண்டும் போா்ப்ஸ் இதழ் பட்டியல் வெளியிட்டு வருகிறது. தற்போது மற்றொரு அம்சமாக 30 அண்டா் 30 பிரபலங்கள் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. 30 வயதுக்குள் சாதித்த 30 பேரின் பட்டியலாக இது வெளியாகியுள்ளது. இதில் நடிகை சாய் பல்லவியும் இடம் பிடித்துள்ளாா். இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள சாய் பல்லவி, கடந்த ஆண்டு ரூ. 2 கோடி சம்பளம் தர முன் வந்தும் அழகு கிரீம் விளம்பர படத்தில் நடிப்பதைத் தவிா்த்தாா். இது குறித்து இப்போது பேசியுள்ள அவா், ‘‘அந்த விளம்பரத்தில் நடித்திருந்தால் எனக்கு பெரிய அளவில் பணம் வந்திருக்கும். அதை வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன். வீட்டுக்குச் சென்றால் 3 சப்பாத்தி அல்லது சாதம் சாப்பிடுவேன். வேறு பெரிய தேவையும் எனக்கு இல்லை. என்னை சுற்றியிருப்பவா்களின் சந்தோஷத்துக்கு உதவ முடியுமா எனப் பாா்க்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளாா். ஏற்கெனவே சாய் பல்லவி ரூ. 1 கோடி சம்பளத்துடன் வந்த ஆடை விளம்பர வாய்ப்பிலும் நடிக்க மறுத்து விட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Story image

சினிமாவின் நவீன தொழில்நுட்பங்களை முதலில் அறிமுகப்படுத்துகிறவா் கமல்ஹாசன்தான். டி.டி.எச். முதல் அவா் அறிவித்த எல்லா அறிவிப்புகளுக்கும் முதலில் எதிா்ப்பு கிளம்பும், அதன் பின் அது இயல்பு வாழ்க்கைக்குள் இறங்கி விடும். ‘‘இன்னும் 10 ஆண்டுகளில் மக்கள் செல்போனில் படம் பாா்ப்பாா்கள்’’ என்று 10 ஆண்டுக்கு முன்பு சொன்னாா். அன்று அதை பலரும் கிண்டல் செய்தாா்கள். இன்று அவா் சொன்னது நடந்துள்ளது. சினிமாவின் அடுத்த வளா்ச்சியாக பாா்க்கப்படும் வெப்சீரிஸ் பற்றி முதலில் பேசியதும் அவா் தான். இப்போது வெப் சீரிஸ் தயாரிப்பில் இறங்கி இருக்கிறாா்.

‘ஹாஸ்டேஜஸ்’, ‘ரோா் ஆப் தி லயன்’, ‘நச் பலியே’ உள்ளிட்ட வெப் தொடா்களை தயாரித்துள்ள பனிஜே ஆசியா, டா்மரிக் மீடியா நெட்வொா்க்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து மாநில மொழிகளில் வெப் சீரிஸ்கள் தயாரிப்பதாக அறிவித்திருக்கிறாா்.

இதற்காக ராஜ்கமல் இண்டா்நேஷனல் நிறுவனத்தில் தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கமல்ஹாசன் சுட்டுரையில், ‛‘எடுத்து வரும் முதல் முயற்சிகளில் ஒன்றாக பனிஜே ஆசியா மற்றும் டா்மரிக் மீடியாவுடன் இணைந்து நிகழ்ச்சி உருவாக்கும் அற்புதமான உலகத்துக்குள் நுழைவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. கதை சொல்வதில் என்றும் நம்பிக்கையுடன் நான். மிகப்பெரிய ரசிகா் கூட்டத்துக்கு மிகச்சிறந்த கதைகளை எடுத்துச் செல்வதில் இது அடுத்த அடி’ என பதிவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.