ஓய்வு எடுக்கும் மஞ்சிமா மோகன்
"அச்சம் என்பது மடமையடா', "தேவராட்டம்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மஞ்சிமா மோகன். இவர் தற்போது சிக்கியுள்ளார். இதில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.


"அச்சம் என்பது மடமையடா', "தேவராட்டம்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மஞ்சிமா மோகன். இவர் தற்போது சிக்கியுள்ளார். இதில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. விபத்து பற்றி வெளியில் சொல்லாமல் வீட்டில் ஓய்வு எடுத்து வந்த மஞ்சிமா சமீபத்தில் அந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் தெரிவித்திருக்கிறார். ஊன்றுகோல் உதவியுடன் அவர் நடந்து வரும் புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார்.
மஞ்சிமா பேசும் போது...
""சில வாரங்களுக்கு முன்பாக நான் எதிர்பாராத விபத்தில் சிக்கினேன். அதில் எனது காலில் காயம் ஏற்பட்டது. அதற்காக அறுவை சிகிச்சையும் நடந்தது. அடுத்த ஒரு மாதத்துக்கு நான் ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறி விட்டனர். முன்பெல்லாம் என்னிடம் பேசுபவர்கள், "உங்கள் வாழ்வில் நீங்கள் சந்தித்த கடினமான தருணம் எது?' என்பார்கள். "அதிர்ஷ்டவசமாக அப்படி எதுவும் இதுவரை நடக்கவில்லை' என்று பதில் அளிப்பேன். ஆனால் அந்த கடினமான தருணம் இந்த விபத்தில் வந்து சேர்ந்திருக்கிறது. இந்த தருணத்தை எனக்கான நேரமாக நான் எடுத்துக்கொண்டு மகிழ்கிறேன். இப்போது தான் எனக்கென்று நேரம் ஒதுக்குவது முக்கியம் என்பதை நான் உணரத் தொடங்கியிருக்கிறேன். இந்த சூழல் என்னை உறுதியானவளாக மாற்றியிருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...