ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பிளாஸ்டிக்கை வெளியேற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்!

தெருவோரம் குவிந்து கிடக்கும் குப்பையைப் பார்த்தவுடன் முகத்தைத் திருப்பிக் கொள்பவர்கள் மத்தியில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற சிந்தனையுடன் பிளாஸ்டிக் கழிவுகளைத் தானே முன்னின்று நேரடியாக அகற்றி வருகிறார் நெல்லை மாவட்டம் அச்சன்புதூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடகோபு.

News image
Updated On :10 அக்டோபர் 2015, 12:43 pm

தெருவோரம் குவிந்து கிடக்கும் குப்பையைப் பார்த்தவுடன் முகத்தைத் திருப்பிக் கொள்பவர்கள் மத்தியில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற சிந்தனையுடன் பிளாஸ்டிக் கழிவுகளைத் தானே முன்னின்று நேரடியாக அகற்றி வருகிறார் நெல்லை மாவட்டம் அச்சன்புதூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடகோபு.

32 வகையான நடவடிக்கைகள் மூலம் பிளாஸ்டிக் இல்லாத பேரூராட்சியாக அச்சன்புதூரை மாற்றுவதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். இதைப் பற்றி அவர் நம்மிடம் பேசியதிலிருந்து...

""முதல்கட்டமாக தலைவர், உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சிப் பணியாளர்களின் கூட்டத்தை நடத்தி பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்ப்பதுடன், பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து சந்திக்கும் மக்களிடம் தெரிவிப்பேன் என்ற உறுதிமொழியைப் பெற்றேன். இதனால் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது.

தலைவர்,உறுப்பினர்கள்,பணியாளர்களைக் கொண்டு பிளாஸ்டிக் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தல், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் விளம்பரதாரர்கள் மூலம் துணிப்பைகளைப் பெற்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்தல், விழிப்புணர்வு சுவரொட்டிகளை முக்கிய இடங்களில் ஒட்டுதல், பள்ளிகளில் பிளாஸ்டிக் விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் நடத்துதல், பள்ளிகளில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகள் நடத்தி சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்குதல், பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்த கண்காட்சி அமைத்தல், விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நடத்துதல், சைக்கிள் பேரணி நடத்துதல் என்பன உள்ளிட்ட 32 வகையான நடவடிக்கைகள் மூலம் பிளாஸ்டிக் தடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லப்படும் எந்தவொரு விஷயமும் எளிதாக பெற்றோரைச் சென்றடையும் என்பதால் பள்ளிகள் தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் நல்ல பலன் கிடைத்து வருகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் முயற்சியைச் சிறப்பாக செய்து வரும் அச்சன்புதூர் பேரூராட்சிக்கு, பேரூராட்சி இயக்குநர் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மகளிர் குழுக்கள் மற்றும் பேரூராட்சிப் பணியாளர்களுடன் இணைந்து நேரம் கிடைக்கும் சமயத்தில் நானே பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி வருகிறேன். இந்தப் பணிகளுக்கு பேரூராட்சி உதவி இயக்குநர், பேரூராட்சித் தலைவர் டாக்டர் சுசீகரன் மற்றும் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தாமல் இருந்தால் வளமான பூமியை உருவாக்க முடியும்'' என்றார் வெங்கடகோபு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.