என் மனைவிக்கு 69 வயது. சென்ற ஒரு வருடமாக அவளுக்கு மிகுந்த ஏப்பம் வருகிறது. அபான வாயுவும் பிரிகிறது. உணவுக்கு முன்பும் பின்பும் ஏப்பத் தொல்லை இருக்கிறது. ஜீரண சக்தி குறைவு. உணவுக் குழாயிலுள்ள VALVE (Relaxed valve) சற்றே திறந்திருப்பதால்தான் ஏப்பம் வருகிறது என்று டாக்டர் கூறுகிறார். சில நேரங்களில் வயிற்றில் வலியும் வருகிறது. இந்த உபாதை மாற ஆயுர்வேத மருந்துகள் இருக்கின்றனவா?
நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு சில உணவுப் பொருட்களால் உங்களுடைய மனைவிக்குக் குணம் கிடைக்கலாம்.
எலுமிச்சம் பழச்சாறு 1 லிட்டர், தோல் நீக்கிய இஞ்சிச் சாறு அரை லிட்டர், சர்க்கரை 3 கிலோ, ஏலக்காய் தூள் 3 கிராம், பச்சைக் கற்பூரம் கால் கிராம், குங்குமப்பூ கால் கிராம்.
இஞ்சிச் சாற்றை நன்கு தெளிய வைத்து, எலுமிச்சம் பழச்சாறுடன் சேர்த்து, சர்க்கரையும் கலந்து, மெல்லிய துணியால் வடிகட்டி அடுப்பிலேற்றிக் காய்ச்சவும். இளம்பாகாக வரும் போது கீழே இறக்கி ஆற வைத்து, ஏலக்காய்த் தூள், பச்சைக் கற்பூரம், குங்குமப் பூ இவற்றை நன்கு அரைத்து பானகத்தில் சேர்த்துக் கலக்கிவிடவும். ஒரு நாளில் 2 -3 வேளை, வேளைக்கு 1 - 2 டீ ஸ்பூன் வீதம் தண்ணீர் கலந்தோ, கலக்காமலோ, உணவுக்கு முன்போ, பின்போ நன்கு சுவைத்துச் சாப்பிடவும்.
இந்தப் பானம் நாக்குக்கும், மனதுக்குக்கும், உடலுக்கும் மிகவும் நன்மை தரக் கூடியது. வாயில் ஒரு கசப்பு, புளிப்பு, புளித்த ஏப்பம், வயிறு நிரம்பி இருப்பது போன்ற உணர்ச்சி, உணவில் வெறுப்பு, கண், கை கால்களில் லேசாக எரிச்சல் இவற்றுடன் ஏற்படும் அஜீர்ணத்திலும், தலைசுற்றுதல், மயக்கம் முதலிய கோடை கால உபாதைகளிலும் இது நன்கு உபயோகப்படுகின்றது. உணவுக்குப் பிறகு 2 - 3 வேளை சாப்பிட நல்லது.
உணவைச் சீரணிக்க உதவும் புளிப்புத் திரவங்கள் சரியாகச் சுரக்காமலும் ஈரல் சரியாக வேலை செய்யாமலும் ஏற்படும் அஜீரணத்துக்கு, உணவுக்கு 5 -10 நிமிடங்களுக்கு முன்னர், தண்ணீர் கலக்காமல் இந்தப் பானகத்தைச் சாப்பிட்டு, உணவைச் சாப்பிட அந்த அஜீரணம் மாறிவிடுகிறது.
இது தவிர நாவறட்சி, நாக்கில் ருசியின்மை, வாயில் இனிப்பு, கசப்பு, புளிப்பு உணரப்படுதல், நாக்கில் நீர் ஊறுதல், குமட்டல், வாந்தி, பசிக்குறைவு, நீங்கள் குறிப்பிடும் தங்ப்ஹஷ்ங்க் யஹப்ஸ்ங் திறந்திருத்தல் பிரச்னை இவற்றுக்கு 1 -2 ஸ்பூன் அளவு தினம் 2 -3 வேளை சாப்பிடுவது நல்லது. கர்ப்பிணிக்கு கருத்தரித்த முதல் சில மாதங்களுக்கு மசக்கையால் ஏற்படும் இனம் தெரியாத கலக்கம், உமிழ்நீர் சுரத்தல், குமட்டல், வாந்தி, பசிக்குறைவு முதலிய உபத்திரவங்களைப் போக்குவதற்கும் ஏற்ற சிறந்த மருந்து (நன்றி: ஆரோக்கியம், 1963)
ஆயுர்வேத மருந்துக் கடைகளில் வைச்வாநர சூர்ணம் என்ற மருந்து விற்பனையாகிறது. இந்துப்பு, ஜீரகம், ஓமம், திப்பிலி, சுக்கு மற்றும் கடுக்காய்த் தோல் ஆகியவற்றை மூலப் பொருட்களாகக் கொண்ட இந்த சூரண மருந்தை 1 -3 கிராம் அல்லது 1 1/2 ஸ்பூன் அளவில் தினமும் 2 முதல் 4 வேளை வரை உசிதப்படி வெந்நீர், தேன், மோர் இவற்றுடன் சாப்பிடலாம். வைச்வாநரம் என்றால் எல்லாவற்றையும் எரிக்கக் கூடிய அக்னி என்று அர்த்தமாகும். பெயருக்கேற்றபடி உணவை நன்கு ஜீரணமாக்கி வயிற்றுப் பொருமல், வயிற்றில் வாயு தங்கல், ஏப்பம் போன்றவற்றைக் குணமாக்கிவிடும். வயதான காலத்தில் ஜீரண சக்தி குன்றியவர்கள் இரவில் தினமும் ஒரு வேளை சாப்பிட்டு வர, ஜீரண சக்தி சீராகி இரைப்பை, கல்லீரல், குடல் முதலியவை சுறுசுறுப்புடன் இயங்கும்.
இரைப்பை - குடல் ஆகிய பகுதிகளில் அன்ன பானங்களுடைய ஜீரண காரியத்தைச் செய்யும் அக்னியுடன் சேர்ந்து, அதற்கு ஸகாயமாய் உணவை ஜீரணம் செய்வித்து, உணவின் சாராம்சத்தையும் சக்கையம்சத்தையும் நெடுகவே எல்லா அவயவங்களிலும் பிரிக்கச் செய்யும் ஸமான வாயுவை அவருக்கு வலுப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. சுமார் 5 மி.லி. இந்து காந்தம் எனும் நெய் மருந்தை உணவின் நடுவே, நக்கிச் சாப்பிட்டு வர, ஸமான வாயுவின் செயல்கள் வலுப்படுவதோடு யஅகயஉ அமைந்துள்ள பகுதியைச் சுற்றியுள்ள நரம்புகளின் செயல்பாடும் உறுதியாகும்.
இப்படியாக உணவுக்கு முன்பும், நடுவிலும் இறுதியிலும் மருந்துகளை உட்கொண்டு அவருக்கு ஏற்பட்டுள்ள ஏப்ப உபாதை, ஜீரணக் குறைவு உபாதைகளை நீக்கிக் கொள்ளலாம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு

‘எக்ஸ்’ தளத்தில் ஆபாச உள்ளடக்கம்: எலான் மஸ்குக்கு பிரான்ஸ் அழைப்பாணை

அடுக்குமாடி குடியிருப்புகளில் பாமக வேட்பாளா் பாலு பிரசாரம்!

தெற்கு லெபனானில் சிலுவை அவமதிப்பு: இஸ்ரேல் வீரருக்கு வலுக்கும் கண்டனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


