எனக்கு வயது 31. எடை 90 கிலோ. திருமணம் நடந்து ஒரு வருடத்துக்கு மேல் ஆகிறது. இதுவரை குழந்தை பிறக்கவில்லை. விந்தணுக்களின் எண்ணிக்கையும் அதன் செயல்படும் திறனும் குறைவாக உள்ளதாகப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை உபாதை, கொலஸ்ட்ரால் ஆகியவற்றுக்கான ஆங்கில மருத்துவ மாத்திரைகளைத் தொடர்ந்து உபயோகித்து வருகிறேன். விந்தணுப் பிரச்னை என்னென்ன காரணங்களால் ஆண்களுக்கு ஏற்படுகிறது? ஆயுர்வேத முறைப்படி சரி செய்ய வழி உண்டா?
ஏ.பெர்னாந்த், திருச்சிமாவட்டம்.
நாம் உண்ணும் உணவு வகைகள், குடலில் பசி எனும் நெருப்பில் வேக வைக்கப்பட்டு, சாரம் அதாவது சத்தான பகுதி, கிட்டம் அதாவது மலமாகவும் பிரிக்கப்பட்டு, உடலின் போஷணத்துக்காகச் சாரம் எடுத்துச் செல்லப்படுகிறது. கிட்டம் எனும் மலப்பகுதியானது வெளியேற்றப்படுகிறது. உணவின் சாரமானது, தாதுக்கள் எனப்படும் ரஸம் - ரக்தம் - மாம்ஸம்- மேதஸ்- அஸ்தி (எலும்பு) - மஜ்ஜா (மஜ்ஜை) - சுக்ரம் (விந்து) ஆகியவற்றின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படுகிறது. மாம்ஸம் மற்றும் மேதஸ் எனும் தாதுக்களில் அடங்கியுள்ள நெருப்பானது, தீவிரமான தன்மையைக் கொண்டிருப்பதால், உணவின் சாரம் உங்களுக்குப் பெரும்பகுதி அங்கேயே வேக வைக்கப்பட்டு, அவற்றின் போஷணைக்காகச் சேர்க்கப்பட்டுவிடுகிறது. சாரம் "இதோ இப்போது வந்துவிடும்' என்று ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருக்கும் அஸ்தி, மஜ்ஜா, சுக்ரம் ஆகிய தாதுக்களுக்கு மிஞ்சுவது வெறும் ஏக்கமே. இதன் காரணமாக, உடல் பருமன் கொண்ட பலருக்கும், விந்தணுக்களின் சத்துக் குறைவினால், குழந்தை பாக்கியம் கிடைக்காமல் மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுகின்றனர்.
எரியும் வீட்டில் மணலையும், தண்ணீரையும் வீசி அணைப்பதை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். அதுபோல மாம்ஸம் மற்றும் மேதஸ் ஆகிய பகுதிகளில் அடங்கியுள்ள நெருப்பை அணைக்க, நிலம் மற்றும் தண்ணீரின் ஆதிக்கம் கொண்ட,இனிப்புப் பொருளைப் பெரும்பகுதியாக குடலின் மூலம் உட் செலுத்தினால், அங்குள்ள நெருப்பு அடங்கக்கூடும். ஆனால் இவ்விரு மஹாபூதங்களும் மாம்ஸம் மற்றும் மேதஸ் ஆகிய தாதுக்களை மேன்மேலும் வளர்க்கக் கூடியவை. அதனால் உங்களுடைய எடை கூடுமே தவிர, குறையாது. நெருப்பின் ஆதிக்கம் கொண்ட சுக்கு, மிளகு, திப்பிலி, பெருங்காயம், சீரகம் போன்றவற்றை அளவில் கூட்டி, மாம்ஸத்தையும், மேதûஸயும் குறைத்துவிடலாம் என்றெண்ணி, அவற்றை உணவாகவும், மருந்தாகவும் சாப்பிட்டால், அவை குறைந்துவிடும். ஆனால் அவற்றில் அடங்கியுள்ள நெருப்பானது மேன்மேலும் வளர்ந்துவிடும். இப்படி ஒரு தர்மசங்கடமான நிலை, உங்களுக்கு இருப்பதால்தான் விந்தணுக்களின் வளர்ச்சி நிறைவானதாக இல்லை.
பல மணி நேரம் கணினியின் முன்னமர்ந்து வேலை செய்தல், தொடைகளை ஆட்டிக் கொண்டே வேலை செய்தல், மனதில் ஏற்படும் வேண்டத்தகாத எண்ணங்களால் உடலும் மனமும் சூடேறி, உடல் பாதிப்புறுதல், பால் கலந்த உளுந்துக் கஞ்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளாதிருத்தல், தேன் குழைத்த அமுக்கரா மற்றும் பூனைக்காலி விதை சூரணம், மகிழ்ச்சியற்ற மனநிலை, மற்றவர் கவனித்துவிடுவாரோ என்ற பயத்துடன் கூடிய பொது அறை, மனைவியானவள் தன் இடப்பக்கமெல்லாமல் வலப்பக்கம் படுத்திருத்தல், மாதவிடாய் நாட்களைக் கவனத்தில் கொள்ளாதிருத்தல், சதுர்த்தி, அஷ்டமி, அமாவாசை, பெüர்ணமி, பித்ரு பிண்ட தினங்கள், சூர்யோதய அஸ்மன சந்த்யா காலங்களை மதிக்காது உதாசீனப்படுத்துதல் போன்ற ஒரு சில காரணங்களை ஆண்கள் கருத்தில் கொள்ளாமல், சிற்றின்ப சுகத்தில் ஈடுபடுவதன் மூலமாக விந்தணுக்கள் குறைந்துபோய் துன்பப்பட நேரிடும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.
மேற்குறிப்பிட்ட காரணங்களை நீங்கள் தவிர்த்துவிட்டாலும், விந்தணுக்களின் வீர்யத்தையும், எண்ணிக்கையையும் நேரடியாக வளர்க்கக் கூடிய மருந்துகள் ஏதேனும் இருந்தால், நன்மையுண்டாக்கும்.
தடங்கல் பல நிறைந்த பாதைகளின் வழியே விரைவாக விந்தணுக்களின் இடத்தைச் சென்றடைய, கைப்பும் வெப்பமும் நிறைந்த மருந்தே உங்களுடைய விஷயத்தில் பயன்படும். அந்த வகையில் குங்குமப் பூ மிகவும் சிறந்தது. போக இச்சையை வளர்த்து, ஆண்மையைப் பலப்படுத்தும். தினமும் ஒரு சிட்டிகை குங்குமப் பூ, மகரந்தத்தூளை, ஒரு தளிர் வெற்றிலையினுள் சுற்றி, காலை, மாலை வெறும் வயிற்றில் தொடர்ந்து 3 -6 மாதங்களுக்குச் சாப்பிட்டு வரலாம். காலி விதையும், இவ்விஷயத்தில் சற்றும் சளைத்ததல்ல. 3 முதல் 5 கிராம் வரை இதன் விதைச் சூரணத்தை, சிறிது வெதுவெதுப்பான பாலுடன் காலை,மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரலாம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு

‘எக்ஸ்’ தளத்தில் ஆபாச உள்ளடக்கம்: எலான் மஸ்குக்கு பிரான்ஸ் அழைப்பாணை

அடுக்குமாடி குடியிருப்புகளில் பாமக வேட்பாளா் பாலு பிரசாரம்!

தெற்கு லெபனானில் சிலுவை அவமதிப்பு: இஸ்ரேல் வீரருக்கு வலுக்கும் கண்டனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


