தோல் உபாதை உள்ளவர்களுக்கு எளிதில் செரிமானமாகக் கூடிய அறுபது நாளில் விளையக் கூடிய சம்பா அரிசி, கசப்புச் சுவையுள்ள கீரைகளும், திரிபலா பத்துகிராம், வேப்பம்பட்டை 5 கிராம் எடுத்து, 1 லிட்டர் தண்ணீரில் காய்ச்சி அதை அரை லிட்டராகக் குறுக்கி வடிகட்டி, அந்தத் தண்ணீரில் வேக வைத்த சோறும் சாப்பிடுவதற்கு நல்ல உணவு வகைகளாகும். மேலும் பழைய தானியங்கள், வறண்ட நிலப் பகுதியிலுள்ள உயிரினங்களின் புலால், பயிறு, புடலங்காய் இவை மிகவும் நலம் தரக் கூடியவை. எளிதில் செரிக்காத ரவா உப்புமா, பரோட்டா, ரவா தோசை, புளிப்பான ஊறுகாய், பால், தயிர், நீர்ப்பகுதியில் வாழும் உயிரினங்களின் புலாலும், மீன், வெல்லம் போன்றவையும் தவிர்க்கத்தக்கவை.