டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

திரைக்கதிர்: சிட்டி தொடங்கி பட்டிதொட்டி வரை!

தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன "ஆர்யா' படத்தை ஜெமினி பிலிம்ஸ் நிறுவனம் தமிழில் "குட்டி' என்ற பெயரில் தயாரிக்கிறது. தனுஷ், ஸ்ரேயா நடிக்கும் இந்தப் படத்தை "யாரடி நீ மோகினி' படத்தை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர்

News image
Updated On :27 டிசம்பர் 2023, 2:15 pm

மனோஜ் கிருஷ்ணா

தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன "ஆர்யா' படத்தை ஜெமினி பிலிம்ஸ் நிறுவனம் தமிழில் "குட்டி' என்ற பெயரில் தயாரிக்கிறது. தனுஷ், ஸ்ரேயா நடிக்கும் இந்தப் படத்தை "யாரடி நீ மோகினி' படத்தை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்குகிறார்.



"குட்டி' பற்றி கேட்டபோது...



""காதல், ஆக்ஷன் கலந்த வித்தியாசமான கதை. கல்லூரி மாணவி ஸ்ரேயா, சக மாணவன் ஒருவனைக் காதலித்தாலும் அவரைத் துரத்தித் துரத்திக் காதலிக்கிறார் தனுஷ். அவரை முழுமையாக வெறுக்கும் ஸ்ரேயா இறுதியில் தனுஷை உயிருக்கு உயிராக விரும்புகிறார். அது எப்படி என்பதை உணர்வுப்பூர்வமாகக் கூறியிருக்கிறோம். பொதுவாக நம் வீட்டிலும் பிற இடங்களிலும் தமக்குப் பிடித்தமானவர்களை செல்லமாகக் "குட்டி' என அழைப்பதுண்டு. அதனாலேயே இந்த டைட்டிலை வைத்தோம். தேவிஸ்ரீபிரசாத்தின் இசையில் பாடல்களும் "தளபதி' தினேஷின் சண்டைக் காட்சிகளும் படத்தின் பெரிய ப்ளஸ் பாய்ண்ட். படம் பொங்கலுக்கு வெளிவருகிறது. சிட்டி தொடங்கி பட்டிதொட்டி வரை "குட்டி' அனைவரையும் கவருவான்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.