பசி யைத் தூண்டி, தன் னைச் சுற் றி யுள்ள மப்பு உண வைச் செரிக் க வும் செய் யக் கூடி ய வ கை யில் அரி சித் திப்பிலி, சுக்கு, தனியா, கோரைக் கிழங்கு, வில் வக் காய் போன் ற வற்றை வகைக்கு 5 கிராம் எடுத்து, 200 மி.லி. தண் ணீர் விட்டு, 50 மி.லி. ஆகும் வரை சுண்ட வைத்து, காலை யில் இந் தக் கஷா யத்தை மூன்று நாட் கள் வெறும் வயிற் றில் குடிப் பது நம் முன் னோர் கள் வழக் கம். அதற் கெல் லாம் நேர மில் லாத இந் நாட் க ளில், நீங் கள் ஆயுர் வேத மருந் தா கிய தாடி மாஷ் ட கம் எனும் சூர ணத்தை, ஐந்து கிராம் வீதம் அள வில் எடுத்து, 8 மி.லி. தேன் குழைத்து, காலை, மாலை வெறும் வயிற் றில் நக் கிச் சாப் பி ட வும்.