ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சமையலறை மருந்துகள்! - 1

மருத்துவத்திற்கான செலவுகள் அதிகரித்துள்ள இந்நாட்களில் நமக்குச் சாதாரணமாக ஏற்படக்கூடிய காய்ச்சல், சளி, இருமல், அஜீரணம், குடல் புழுக்கள், ரத்தக்கொதிப்பு, புண் போன்றவற்றைக் குணமாக்கக் கூடிய சமையல் அறை மர

News image
Updated On :27 டிசம்பர் 2023, 6:30 pm

எஸ். சுவாமிநாதன்

மருத்துவத்திற்கான செலவுகள் அதிகரித்துள்ள இந்நாட்களில் நமக்குச் சாதாரணமாக ஏற்படக்கூடிய காய்ச்சல், சளி, இருமல், அஜீரணம், குடல் புழுக்கள், ரத்தக்கொதிப்பு, புண் போன்றவற்றைக் குணமாக்கக் கூடிய சமையல் அறை மருந்துகளை ஆயுர்வேதம் குறிப்பிட்டுள்ளதா?

வாணி, காஞ்சிபுரம்.

சாதாரணக் காய்ச்சல் போன்றவற்றிற்கு:

சிறிய இஞ்சித் துண்டு, ஒரு ஸ்பூன் ஓமம், 3 கிராம்பு, 5 கறுப்பு மிளகு, வெந்தயம் 1 ஸ்பூன் (5 கிராம்), துளசி, புதினா இலைகள் வகைக்கு 10, ஒரு நார்த்தங்காய் இலை. இவற்றை நன்றாக இடித்து, 2 கிளாஸ் தண்ணீரில் கொதிக்கவிடவும். 1 கிளாஸ் ஆகும் வரை கொதிக்க விட்டு, வடிகட்டவும். சிட்டிகை வெல்லம் சேர்த்து காலை, மாலை வெறும் வயிற்றில்  அருந்தவும். காய்ச்சலின்போது 4-5 சொட்டுகள் வெங்காயச் சாறு சேர்த்துப் பருகலாம்.

20 கிராம் சின்னப் பூண்டு, 1 கப் பால், 1 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விட்டு, பால் அளவைக் குறுக்கவும். இரவு படுக்கும் முன் அருந்தவும்.

1 ஸ்பூன் வெங்காயச் சாறுடன், அதே அளவு தேன் கலந்து 1 நாளில் மூன்று முறை சாப்பிடலாம்.

சளித் தொல்லைக்கு:

சளித் தொல்லைக்கு மஞ்சள் தூள் அல்லது சுக்குப் பொடியை நெற்றியில் அழுத்தித் தேய்த்துவிடவும்.

மூக்கில் கெட்டி சளி அடைப்புக்கு வால் மிளகை நெருப்பில் காட்டி, அதிலிருந்து வரும் புகையை மூக்கினுள்ளே செலுத்தவும். வால் மிளகை ஊசி முனையில் குத்தி இவ்வாறு செய்யலாம்.

அஜீரணத்திற்கு:

1 கிராம் புதிய இஞ்சித் துண்டுடன், சிட்டிகை இந்துப்புச் சேர்த்து, சாப்பாட்டிற்கு ஐந்து நிமிடங்கள் முன்பாக, நன்றாகக் கடித்துச் சாப்பிடவும். நன்றாகப் பசியைத் தூண்டிவிடும்.

1/2 ஸ்பூன் இஞ்சிச் சாறுடன் அதே அளவு எலுமிச்சம் பழச்சாறு அல்லது தேன் சேர்த்துச் சாப்பிடலாம்.

2 ஸ்பூன் புதினா இலைச்சாறு சாப்பிட நல்லது.

குடல் புழுக்களுக்கு:

1 கப் வெதுவெதுப்பான தண்ணீரில், 1 டீ ஸ்பூன் மஞ்சள்தூள் கலந்து, 1 நாளில் மூன்று முறை பருகவும். மலத்துடன் புழுக்கள் வெளியேறும்.

8 - 15 கிராம் பப்பாளி விதைகளை அரைத்து, வெந்நீருடன் கலந்து, இரவில் படுக்கும் முன் மூன்று நாட்கள் சாப்பிடவும் 15 நாட்களுக்குப் பிறகு மறுபடியும் இதே போலச் சாப்பிடவும்.

தொண்டைக் கமறல், கரகரப்புக்கு:

3/4 ஸ்பூன் அதி மதுரத்தூள், 1/4 ஸ்பூன் வசம்புத் தூள், 2 ஸ்பூன் தேன் குழைத்து, 1 நாளில் 4 முறை சாப்பிடவும். மலச்சிக்கலும் இருந்தால் 1  டீ ஸ்பூன் கடுக்காய் தோல் பொடித்ததை, வெந்நீருடன் கலந்து இரவில் படுக்கும் முன் பருகவும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.