/

சிறுகதை: தவிக்கும் இடைவெளிகள்

பையன் வந்து ஒரு மணி நேரம் ஆயிற்று. இன்னும் தன்னிடம் பேசவில்லை. "என்னப்பா, எப்டியிருக்கீங்க.' ரெண்டு வார்த்தைகள்தான். கேட்கத் தெரியவில்லை. பேச வேண்டும் என்று தோன்றவில்லையா? அல்லது "என்ன வேண்டிக் கிடக்க

News image
Updated On :27 டிசம்பர் 2023, 3:29 pm

உஷாதீபன்

பையன் வந்து ஒரு மணி நேரம் ஆயிற்று. இன்னும் தன்னிடம் பேசவில்லை. "என்னப்பா, எப்டியிருக்கீங்க.' ரெண்டு வார்த்தைகள்தான். கேட்கத் தெரியவில்லை. பேச வேண்டும் என்று தோன்றவில்லையா? அல்லது "என்ன வேண்டிக் கிடக்கிறது?' என்ற அலட்சியமா, "எதைப் பேசினாலும் கோபமாகக் கத்தத்தானே போகிறார்? இதற்குப் பேசினால் என்ன பேசாவிட்டால் என்ன?' என்று தோன்றி விட்டதா?

கோபமாகத்தான் பேசுவார் என்று அவனாகவே எப்படி முடிவு செய்து கொண்டான்? தான் பேசுவதெல்லாம் கோபமானதுதான் என்று ஏன் தோன்றிற்று அவனுக்கு? பேச்சே அப்படித்தான், அதனால் அதில் பொதிந்திருக்கும் கருத்தும், அக்கறையும், அன்பும்தான் முக்கியம் என்று ஏன் தோன்றவில்லை?

உள்ளே நுழைந்து நேரே அவன் அறைக்குள் சென்று அடைந்தாயிற்று. கணினியைத் திறந்து அதற்கு முன் உட்கார்ந்தாயிற்று. எவனோ வெளிநாட்டில் இருக்கும் நண்பனாம். அவனோடு பேச்சு, பேச்சு அப்படியொரு பேச்சு. மனதுக்குப் பிடித்தது அதுதான் போலும். அவன் கேள்வி கேட்க இவன் பதில் சொல்ல... இவன் திருப்பிக் கேட்க, அவன் பதில் சொல்ல... "சேட்' பண்ணுகிறார்களாம்... என்ன இழவோ எவனுக்குப் புரிகிறது இதெல்லாம்?

அந்தத் திரையும், எழுத்தும், அதன் பிம்பங்களும் தரும் சந்தோஷத்தையும் நிறைவையும் வீட்டில் உள்ள நான் தரவில்லை... அதுதானே? என்னிடம் அவனுக்கு அது கிடைக்கவில்லை. இவன் கொடுப்பதை வாய் மூடி வாங்கிக் கொள்கிறதே அது... அதனால் அதைப் பிடிக்கிறதா? இவனுக்கு எதிர்ப்பு இல்லாத அரூபங்கள் இணக்கமாக உள்ளன. அப்படித்தானே? தனது எந்தச் செயலுக்கும் எந்தவிதமான எதிர்ப்பும் இருத்தல் கூடாது. அதுதான் சுதந்திரம் என்று நினைக்கிறானா? சுதந்திரம் என்ற வார்த்தை அதன் பொருள் இன்று பலரிடமும் இப்படித்தானே படிந்து கிடக்கிறது?

அனந்தராமன் ஹாலுக்குள் தலை நீட்டிப் பார்த்தார். அங்கே அவன் வழக்கமாக அமரும் இடத்தில் அந்த நாற்காலி மட்டும் கிடந்தது. அவருடைய மனைவியையும் ஹாலில் காணவில்லை. மகனைப் பார்க்க அவன் அறைக்குள் போய் உட்கார்ந்துவிட்டாள்.

"மகன் வந்ததும் அவனோடு போய் உட்கார்ந்து கொண்டாயிற்று. இனி தான்கூட அவளுக்கு ஒரு பொருட்டில்லை. அதுவரையிலான இருவருக்கும் பொதுவான தவிப்பு, மனச் சங்கடம், வருத்தம், பயம் எல்லாமும் எங்கே போயிற்று அவையெல்லாம் வெறும் பெயரளவிலான உணர்ச்சிகளா அவளுக்கு? அவனைக் கண்ணால் கண்டதும் எல்லாமும் மறைந்து, மறந்து போயிற்றா சொல்ல வேண்டியதை அவர் சொல்லிக் கொள்ளட்டும், நமக்கெதற்கு வம்பு என்று தான் ஒதுங்கிக் கொண்டு நல்லபிள்ளையாகிக் கொள்ளும் தந்திரமா... அடி பாதகத்தி.

"அவன் உனக்கும் பெப்பே, உங்கப்பனுக்கும் பெப்பே என்று சொல்லிவிட்டுச் செல்பவனடி... இது புரியவில்லையா? கடைசியில் நீ என்னிடம்தானடி தஞ்சம் அடைந்தாக வேண்டும். இதுகூடப் புரியாத அப்பாவியா நீ?'

"எதுக்கெடுத்தாலும் கோபப்படுறதும், டென்ஷனாகுறதும், படபடன்னு பேசுறதும், எல்லாம் உங்க அப்பாதாண்டா. பெரிய டென்ஷன் பார்ட்டி. சொல்லியிருப்பாளோ... ராத்திரி பூராவும் எனக்குக் கூடத்தான் துôக்கமில்லை. இதே நினைப்பாத்தான் இருந்தது...' என்றாளே அது பொய்யா?

"நியாயமாய்த் தோன்ற வேண்டிய உணர்ச்சிகள் அந்தந்த நேரத்தில் தோன்றவில்லையென்றால் அவன் என்ன மனுஷன்? நியாயமாய் என்றால் எது நியாயம் உங்களுக்கு? உங்களுக்கு நியாயமாய்த் தோன்றுவது மற்றவங்களுக்கும் நியாயமாத் தோணனும்னு அவசியமா கட்டாயமா? மனுஷாளுக்கு மனுஷாள் மனநிலை மாறுபடாதா? குணநலன்கள வச்சிதானே மனநிலை?'

"எனக்குத் தோணலை...'

"எல்லாத்தையும் அப்டி அப்படியே விட்டிடணும். வளர்க்கப்படாது. நம்ம பையன்தானே... விடுங்கோ... விட்டுடுங்கோ...'

"இப்போ விடாம அவன என்ன பிடிச்சா வச்சிண்டிருக்கு. விட்டு விட்டுத்தானே இந்த நிலைமைல வந்து நின்னிருக்கு?'

"என்ன நிலைமை. இல்ல என்ன நிலைமைன்னு கேட்கறேன். அவனென்ன கெட்டுச் சீரழிஞ்சு நிக்கிறானா உதவாக்கரையாப் போயிட்டானா? என்னவோ பெரிசாப் பேச வர்றீங்களே?'

"அடிப்பாவி. ராத்திரி பூராவும் என்னோடு ஒத்துப் பாடிட்டு, இப்போ வந்தவுடனே சட்னு இப்டிப் பிரண்டு பேசறியே இது அநியாயம்டி... நீ நல்லவளாகிக்கிறியா என்னை மட்டும் மாட்டிவிடப் பார்க்கிறியா இது அடுக்காதுடி... ஆண்டவனுக்கே அடுக்காதாக்கும்'

"அடுக்காட்டிப் போகட்டும்... அவன்தான் வந்துட்டான்ல... சரின்னு விடுவீங்களா. இதப் போயி தேவையில்லாம இழுத்திட்டிருக்கீங்க. வெட்டிப் பேச்சு எதுக்கு விட்டுத் தள்ளுங்க'

பேசப் புகுந்தால் நிச்சயமாய் அவள் என்னவெல்லாம் சொல்வாளோ அது அத்தனையையும் இவர் தனக்குத்தானே சொல்லிப் பார்த்துக் கொண்டார். கேள்வியும் பதிலுமாகத் தான் இங்கேயொரு பெரிய மனப் போராட்டத்தில் தவித்துக் கொண்டிருக்கையில், உள்ளே பையனோடு ஜாலியாய் சிரிக்கச் சிரிக்கப் பேசிக் கொண்டிருக்கிறாள். அவன் சொல்வதற்கெல்லாம் தலையாட்டிக்கொண்டு, புரிகிறதோ புரியவில்லையோ "ம்ம்...அப்டியா' என்றும் "அடடே என்னல்லாம் தெரிஞ்சி வச்சிண்டிருக்கே' என்று செயற்கையாய் அவனைப் புகழ்ந்து கொண்டும், இயல்பாயும் போலியாயும் சிரித்துக் கொண்டும், (உனக்குத்தாண்டி காலம்...) இணக்கமாய்ப் பொழுது போனால் சரி என்று கழித்து விடுகிறாள்.

இதுவும் ஒரு வகையிலான சாமர்த்தியம்தானே? காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு. எவ்வளவு சமர்த்து அவள் அப்படியானால், தான் என்ன அசடா ஆமா. அசடுதான். அதிலென்ன சந்தேகம்?

"இந்தக் காலத்தில் இப்டிச் சின்னச் சின்ன விஷயத்தையெல்லாம் பெரிசாக்குவாங்களா கோபப்படுறது, கத்துறது, இதெல்லாம் ரொம்பப் பழசு. எதையுமே கண்டுக்காம இருக்கிறதுதான் இப்போ நாகரீகம்... அதத் தெரிஞ்சிக்குங்கோ முதல்ல. எல்லாமே டேக் இட் ஈஸி பாலிஸிதான். நடக்கிறபடி நடக்கட்டும்னு போயிட்டேயிருக்க வேண்டியத்தான்...'

"அதான்... அதான் சொன்னனே. கடைசில கேனக் கிறுக்கன் நானாத்தான் ஆவேன்னு. எனக்கொண்ணும் நஷ்டமில்லே இதுனால. நீ சொல்றதுனால அசடாயிட மாட்டேன் நான். ஆனா எது சரின்னு ஒண்ணு இருக்கு எந்தக் காலத்துக்கும் பொருந்துற மாதிரி... அதை எந்தக் கொம்பனும் மாத்த முடியாதாக்கும்... இப்போல்லாம் அப்டி இருக்க முடியாது. காலத்துக்கு ஏத்தமாதிரி மாறித்தான் ஆகணும்னு சொல்லலாம். செய்யலாம். ஆனா அந்த மாதிரிச் சொல்றதும் செய்றதும் என்னைக்குமே நல்ல ரிசல்டைத் தராது. தந்ததுமில்லே. தெரிஞ்சிக்கோ.. அதுதான் சத்தியம்' தனக்குத்தானே புலம்பிக் கொள்கிறார் அனந்தராமன்.

உள்ளே பையனோடு சேர்ந்த தன் மனைவியின் சிரிப்பொலி கேட்கிறது. கொடுத்து வைத்தவள். சட்டுச் சட்டுன்னு நிறம் மாறிக் கொண்டு எத்தனை சகஜமாகி விடுகிறாள்? ராத்திரியெல்லாம் பட்ட பாடு இப்பொழுது அவள் நினைவில் இருக்குமா? "ஏங்க... இவனென்ன செல்லை சுவிட்ச் ஆஃப் பண்ணியே வச்சிருக்கான். ஆபீசிலேர்ந்தும் போட்டுப் பார்த்துட்டேன். கிடைக்கவேயில்லை... நீங்க பேசினீங்களா?'

"பேசாம எனக்கு மட்டும் எப்படிக் கிடைக்கும். அவன் ரூம் மேட் ராகுலுக்குப் போட்டேன்... ரிங் போகுது. எடுக்கவே மாட்டேங்கிறான். நம்ம பிள்ளையாண்டான் எங்க அப்பாதாண்டா பேசுவாரு. எடுக்காதன்னிருப்பான். சரி எங்கூடப் பேச வேண்டாம். நாந்தான் பகையாளி. உனக்குப் பதில் சொல்லலாமில்லியா? ரொம்பப் பீத்திக்கிறியே பையன் பையன்னு... ஒரு போன் நினைச்ச நேரத்துக்குப் பேச முடியுதா அவனோட உன்னால...?

உன்னை மதிச்சாவது ரெண்டு வார்த்தை சொல்றானா ஹாஸ்டல் வேண்டாம்னு தனியா வீடு பார்த்து வச்சு, எத்தனை செலவானாலும் பரவால்லன்னு நல்லா படிச்சு, பெரிய உத்தியோகத்துல உட்கார்ந்தாப் போதும்னு எல்லா வசதியும் பண்ணிக் கொடுத்து சென்னைல இவன உட்கார்த்தினா ஒரு ஃபோன் பண்ணிச் சொல்லக் கூட ஐயாவுக்கு வலிக்குது. எப்பப் போட்டாலும் சுவிட்ச் ஆஃப், சுவிட்ச் ஆஃப்னு வருது. நம்ம கூடப் பேசப் பிடிக்கலைங்கிறதுக்காக ஃபோனை எந்த நேரமுமா ஆஃப் பண்ணி வைப்பாங்க? பிடிக்காமப் போற அளவுக்கு அப்படி என்ன கொடுமை பண்ணினோம்? நாம எல்லாம் நல்லதுதானே பண்ணி வச்சிருக்கோம். எதிர்பார்ப்புக்கு மேலதானே எல்லாமும் செய்து வச்சிருக்கோம்? உடனுக்குடனே சுலபமா எல்லாமும் கிடைக்குதுங்கிறதாலேயே அதுமேல இவனுங்களுக்கு மதிப்பு இல்லாமப் போச்சு போலிருக்கு. கஷ்டப்பட்டுக் கிடைக்காத எதுவுமே மதிப்பிழந்து போகும்ங்கிறதுக்கு இதுதான் உதாரணம். அட, நம்ப கூடத்தான் பேச வேண்டாம்... அவன் ஃப்ரென்ட்ஸ்களோட பேச என்ன செய்றானாம்? ஒரு வேளை அதுக்குத் தனி ஃபோன் எதுவும் வச்சிருப்பானோ இருக்கலாம், எவனுக்குத் தெரியும்? பேங்க பாலன்ஸ் இறங்குறத மட்டும்தான நாம பார்க்கிறோம். என்ட்ரி போடறதைச் சொல்றேன்...என்ன செலவு, ஏது செலவுன்னு ஒண்ணும் கேட்குறதில்லையே செலவும் வேக வேகமாத்தானே ஆகுது...நின்னு நிதானிச்சு கேட்குற ஸ்பீடுலயா இருக்குது அப்டியே கேட்டாலும் அதுவும் தப்பாயிருமே எதத்தான் கேட்க முடியுது? இந்தக் காலத்துப் பசங்ககிட்டே எதாச்சும் பேசினா, எது நாகரீகம், எது அநாகரீகம்னு நமக்கே அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிடுறானுங்க... எப்டியோ போகட்டும் வேண்டாங்கலே... இப்போ நமக்கு மதிப்பளிக்கலைன்னு யாரு கவலைப்பட்டா எவன் என்ன கேட்குறது அவன் ஒரு நல்ல இடத்துல உட்கார்ந்தாச் சரி.. அதுதான் நமக்கு வேணும்.

அதுக்குத்தான் இத்தனை கஷ்டமும் கேவலமும். ஆனாலும் ஒரு ரெண்டு வார்த்தை. கிளம்பிட்டேம்ப்பா... காலைல வந்திடுவேன். பஸ் ஸ்டான்ட் வந்ததும் பேசறேன். சொல்லலாம்ல? தெரியலையே...'

"எத்தனை வாட்டி சொல்லிக் கொடுத்தாலும் தெரியலியே  ஆரம்பிச்சிட்டீங்களா..?திரும்பவும் துவக்குறீங்க போலிருக்கு. அத்தோட விடமாட்டீங்க நீங்க...'

"ஏன் சொல்றேன்னா, அன்னைக்கே ரிசர்வ் பண்ணிட்டான்லடி. இதுவரைக்கும் ஒரு ஃபோனைக் கூடக் காணலியே எங்க போனான் என்ன ஆனான் மனசு தவிக்குமால்லியா? டிரெயின் எதையும் தவற விட்டுட்டானா பஸ்ல வரானா பெரிய மெட்ரோபாலிட்டன் சிட்டில என்னாச்சு ஏதாச்சுன்னு எவனுக்குத் தெரியும்? யாரையாச்சும் கேட்டுத் தெரிஞ்சிக்க முடியுமா சொல்லு? ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு இடத்துல இருப்பாங்க... ஃபோன் இருந்து என்ன பிரயோஜனம் பேச முடியலியே இத்தன தவிப்புக்கு இவனைப் பேசாம ஹாஸ்டல்லயே இருத்தி வச்சிருக்கலாம் போலிருக்கு. ன்னா வார்டன்ட சொல்லாம வெளியேற முடியாது பாரு. ஆள் இல்லாட்டியும் ஹாஸ்டலுக்குப் பேசி விபரம் தெரிஞ்சிக்கலாமே? எப்பப் பார்த்தாலும் சுவிட்ச் ஆஃப் பண்ணி வைக்கிறதுக்கா இவனுங்களுக்கு ஃபோன் வாங்கிக் கொடுத்தது? தண்டம்... தண்டம்...'

தான் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு ஒன்றும் செய்ய இயலாமல், எதுவும் ஓடாமல், பெருத்த மனத் தவிப்போடு கண்களில் நீர் தளும்ப செய்வதறியாது அமர்ந்திருந்த அவள், இதோ... உள்ளே இன்று கலகலவென்று சிரித்துக் கும்மாளமிட்டபடி மகனோடு ஒன்றியிருக்கிறாள். எல்லாம் முடித்து தன்னிடம் வந்து எப்படியும் ரெண்டு வார்த்தை பேசுவான் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் அனந்தராமன்.

சீரழிஞ்சு நிக்கிறானா உதவாக்கரையாப் போயிட்டானா? என்னவோ பெரிசாப் பேச வர்றீங்களே?'

"அடிப்பாவி. ராத்திரி பூராவும் என்னோடு ஒத்துப் பாடிட்டு, இப்போ வந்தவுடனே சட்னு இப்டிப் பிறண்டு பேசறியே இது அநியாயம்டி... நீ நல்லவளாகிக்கிறியா என்னை மட்டும் மாட்டிவிடப் பார்க்கிறியா இது அடுக்காதுடி... ஆண்டவனுக்கே அடுக்காதாக்கும்'

"அடுக்காட்டிப் போகட்டும்... அவன்தான் வந்துட்டான்ல... சரின்னு விடுவீங்களா. இதப் போயி தேவையில்லாம இழுத்திட்டிருக்கீங்க. வெட்டிப் பேச்சு எதுக்கு விட்டுத் தள்ளுங்க'

பேசப் புகுந்தால் நிச்சயமாய் அவள் என்னவெல்லாம் சொல்வாளோ அது அத்தனையையும் இவர் தனக்குத்தானே சொல்லிப் பார்த்துக் கொண்டார். கேள்வியும் பதிலுமாகத் தான் இங்கேயொரு பெரிய மனப் போராட்டத்தில் தவித்துக் கொண்டிருக்கையில், உள்ளே பையனோடு ஜாலியாய் சிரிக்கச் சிரிக்கப் பேசிக் கொண்டிருக்கிறாள். அவன் சொல்வதற்கெல்லாம் தலையாட்டிக்கொண்டு, புரிகிறதோ புரியவில்லையோ "ம்ம்...அப்டியா' என்றும் "அடடே என்னல்லாம் தெரிஞ்சி வச்சிண்டிருக்கே' என்று செயற்கையாய் அவனைப் புகழ்ந்து கொண்டும், இயல்பாயும் போலியாயும் சிரித்துக் கொண்டும், (உனக்குத்தாண்டி காலம்...) இணக்கமாய்ப் பொழுது போனால் சரி என்று கழித்து விடுகிறாள்.

இதுவும் ஒரு வகையிலான சாமர்த்தியம்தானே? காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு. எவ்வளவு சமர்த்து அவள்? அப்படியானால், தான் என்ன அசடா ஆமா. அசடுதான். அதிலென்ன சந்தேகம்?

"இந்தக் காலத்தில் இப்டிச் சின்னச் சின்ன விஷயத்தையெல்லாம் பெரிசாக்குவாங்களா கோபப்படுறது, கத்துறது, இதெல்லாம் ரொம்பப் பழசு. எதையுமே கண்டுக்காம இருக்கிறதுதான் இப்போ நாகரீகம்... அதத் தெரிஞ்சிக்குங்கோ முதல்ல. எல்லாமே டேக் இட் ஈஸி பாலிஸிதான். நடக்கிறபடி நடக்கட்டும்னு போயிட்டேயிருக்க வேண்டியதுதான்...'

"அதான்... அதான் சொன்னனே. கடைசில கேணக் கிறுக்கன் நானாத்தான் ஆவேன்னு. எனக்கொண்ணும் நஷ்டமில்லே இதுனால. நீ சொல்றதுனால அசடாயிட மாட்டேன் நான். ஆனா எது சரின்னு ஒண்ணு இருக்கு எந்தக் காலத்துக்கும் பொருந்துற மாதிரி... அதை எந்தக் கொம்பனும் மாத்த முடியாதாக்கும்... இப்போல்லாம் அப்டி இருக்க முடியாது. காலத்துக்கு ஏத்தமாதிரி மாறித்தான் ஆகணும்னு சொல்லலாம். செய்யலாம். ஆனா அந்த மாதிரிச் சொல்றதும் செய்றதும் என்னைக்குமே நல்ல ரிசல்டைத் தராது. தந்ததுமில்லே. தெரிஞ்சிக்கோ.. அதுதான் சத்தியம்' தனக்குத்தானே புலம்பிக் கொள்கிறார் அனந்தராமன்.

உள்ளே பையனோடு சேர்ந்த தன் மனைவியின் சிரிப்பொலி கேட்கிறது. கொடுத்து வைத்தவள். சட்டுச் சட்டுன்னு நிறம் மாறிக் கொண்டு எத்தனை சகஜமாகி விடுகிறாள்? ராத்திரியெல்லாம் பட்ட பாடு இப்பொழுது அவள் நினைவில் இருக்குமா? "ஏங்க... இவனென்ன செல்லை சுவிட்ச் ஆஃப் பண்ணியே வச்சிருக்கான். ஆபீசிலேர்ந்தும் போட்டுப் பார்த்துட்டேன். கிடைக்கவேயில்லை... நீங்க பேசினீங்களா?'

"பேசாம எனக்கு மட்டும் எப்படிக் கிடைக்கும். அவன் ரூம் மேட் ராகுலுக்குப் போட்டேன்... ரிங் போகுது. எடுக்கவே மாட்டேங்கிறான். நம்ம பிள்ளையாண்டான் எங்க அப்பாதாண்டா பேசுவாரு. எடுக்காதன்னிருப்பான். சரி எங்கூடப் பேச வேண்டாம். நாந்தான் பகையாளி. உனக்குப் பதில் சொல்லலாமில்லியா? ரொம்பப் பீத்திக்கிறியே பையன் பையன்னு... ஒரு போன் நினைச்ச நேரத்துக்குப் பேச முடியுதா அவனோட உன்னால...?

உன்னை மதிச்சாவது ரெண்டு வார்த்தை சொல்றானா ஹாஸ்டல் வேண்டாம்னு தனியா வீடு பார்த்து வச்சு, எத்தனை செலவானாலும் பரவால்லன்னு நல்லா படிச்சு, பெரிய உத்தியோகத்துல உட்கார்ந்தாப் போதும்னு எல்லா வசதியும் பண்ணிக் கொடுத்து சென்னைல இவன உட்கார்த்தினா ஒரு ஃபோன் பண்ணிச் சொல்லக் கூட ஐயாவுக்கு வலிக்குது. எப்பப் போட்டாலும் சுவிட்ச் ஆஃப், சுவிட்ச் ஆஃப்னு வருது. நம்ம கூடப் பேசப் பிடிக்கலைங்கிறதுக்காக ஃபோனை எந்த நேரமுமா ஆஃப் பண்ணி வைப்பாங்க? பிடிக்காமப் போற அளவுக்கு அப்படி என்ன கொடுமை பண்ணினோம்? நாம எல்லாம் நல்லதுதானே பண்ணி வச்சிருக்கோம். எதிர்பார்ப்புக்கு மேலதானே எல்லாமும் செய்து வச்சிருக்கோம்? உடனுக்குடனே சுலபமா எல்லாமும் கிடைக்குதுங்கிறதாலேயே அதுமேல இவனுங்களுக்கு மதிப்பு இல்லாமப் போச்சு போலிருக்கு. கஷ்டப்பட்டுக் கிடைக்காத எதுவுமே மதிப்பிழந்து போகும்ங்கிறதுக்கு இதுதான் உதாரணம். அட, நம்ப கூடத்தான் பேச வேண்டாம்...

அவன் ஃப்ரென்ட்ஸ்களோட பேச என்ன செய்றானாம்? ஒரு வேளை அதுக்குத் தனி ஃபோன் எதுவும் வச்சிருப்பானோ இருக்கலாம், எவனுக்குத் தெரியும்? பேங்க பாலன்ஸ் இறங்குறத மட்டும்தான நாம பார்க்கிறோம். என்ட்ரி போடறதைச் சொல்றேன்... என்ன செலவு, ஏது செலவுன்னு ஒண்ணும் கேட்குறதில்லையே செலவும் வேக வேகமாத்தானே ஆகுது... நின்னு நிதானிச்சு கேட்குற ஸ்பீடுலயா இருக்குது அப்டியே கேட்டாலும் அதுவும் தப்பாயிருமே எதத்தான் கேட்க முடியுது? இந்தக் காலத்துப் பசங்ககிட்டே எதாச்சும் பேசினா, எது நாகரீகம், எது அநாகரீகம்னு நமக்கே அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிடுறானுங்க... எப்டியோ போகட்டும் வேண்டாங்கலே... இப்போ நமக்கு மதிப்பளிக்கலைன்னு யாரு கவலைப்பட்டா எவன் என்ன கேட்குறது அவன் ஒரு நல்ல இடத்துல உட்கார்ந்தாச் சரி.. அதுதான் நமக்கு வேணும்.

அதுக்குத்தான் இத்தனை கஷ்டமும் கேவலமும். ஆனாலும் ஒரு ரெண்டு வார்த்தை. கிளம்பிட்டேம்ப்பா... காலைல வந்திடுவேன். பஸ் ஸ்டான்ட் வந்ததும் பேசறேன். சொல்லலாம்ல? தெரியலையே...'

"எத்தனை வாட்டி சொல்லிக் கொடுத்தாலும் தெரியலியே  ஆரம்பிச்சிட்டீங்களா..?திரும்பவும் துவக்குறீங்க போலிருக்கு. அத்தோட விடமாட்டீங்க நீங்க...'

"ஏன் சொல்றேன்னா, அன்னைக்கே ரிசர்வ் பண்ணிட்டான்லடி. இதுவரைக்கும் ஒரு ஃபோனைக் கூடக் காணலியே எங்க போனான் என்ன ஆனான் மனசு தவிக்குமால்லியா? டிரெயின் எதையும் தவற விட்டுட்டானா பஸ்ல வரானா பெரிய மெட்ரோபாலிட்டன் சிட்டில என்னாச்சு ஏதாச்சுன்னு எவனுக்குத் தெரியும்? யாரையாச்சும் கேட்டுத் தெரிஞ்சிக்க முடியுமா சொல்லு? ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு இடத்துல இருப்பாங்க... ஃபோன் இருந்து என்ன பிரயோஜனம் பேச முடியலியே இத்தன தவிப்புக்கு இவனைப் பேசாம ஹாஸ்டல்லயே இருத்தி வச்சிருக்கலாம் போலிருக்கு. ன்னா வார்டன்ட சொல்லாம வெளியேற முடியாது பாரு. ஆள் இல்லாட்டியும் ஹாஸ்டலுக்குப் பேசி விபரம் தெரிஞ்சிக்கலாமே? எப்பப் பார்த்தாலும் சுவிட்ச் ஆஃப் பண்ணி வைக்கிறதுக்கா இவனுங்களுக்கு ஃபோன் வாங்கிக் கொடுத்தது? தண்டம்... தண்டம்...'

தான் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு ஒன்றும் செய்ய இயலாமல், எதுவும் ஓடாமல், பெருத்த மனத் தவிப்போடு கண்களில் நீர் தளும்ப செய்வதறியாது அமர்ந்திருந்த அவள், இதோ... உள்ளே இன்று கலகலவென்று சிரித்துக் கும்மாளமிட்டபடி மகனோடு ஒன்றியிருக்கிறாள். எல்லாம் முடித்து தன்னிடம் வந்து எப்படியும் ரெண்டு வார்த்தை பேசுவான் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் அனந்தராமன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.