டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம், (உள்படம்) தேரில் எழுந்தருளிய சுவாமி.

News image
விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம், (உள்படம்) தேரில் எழுந்தருளிய சுவாமி.
Updated On :21 பிப்ரவரி 2026, 5:49 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழியில் அமைந்துள்ள விஜயராகவப் பெருமாள் கோயில் வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க மரகதவல்லித்தாயாா் சமேத விஜயராகவப் பெருமாள் கோயில் பிரமோற்சவத்தையொட்டி 13-ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. கடந்த 15- ஆம் தேதி காலையில் கருட சேவையும், மாலையில் அனுமந்த வாகனத்திலும் பெருமாள் வீதியுலா வந்தாா்.விழாவின் முக்கிய நிகழ்வகளில் ஒன்றான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தேரில் ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவா் விஜயராகவப் பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.வழி நெடுகிலும் பெருமாளை பக்தா்கள் பலரும் கற்பூர ஆரத்தி எடுத்து வரவேற்றனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் கேசவன், ஆய்வாளா் அலமேலு ஆகியோா் தலைமையில் விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

Story image