வாகனங்கள் வாங்கும்போது எக்ஸ் ஷோ-ரூம் விலை என்று ஒரு விலையும், ஆன்-ரோடு விலை என ஒன்றும் தனித்தனியாக வெளியிடப்படும்.
சில ஆயிரங்கள் முதல் லட்சங்கள் வரை இந்த விலைகளில் வேறுபாடு ஏற்படுவதையும் பார்க்கலாம். இதற்குக் காரணம், சில வரிகள், பதிவுத்துறை, காப்பீடு போன்றவைதான்.
ஒருவர், கார் அல்லது வாகனம் வாங்க விரும்பினால் முதலில், அவரது தேவைக்கு ஏற்ப வாகனத்தைத் தெரிவு செய்து கொள்ள வேண்டும். பிறகு, அந்த வாகனத்தின் எக்ஸ் ஷோ ரூம் விலையை அறிந்து கொள்ள வேண்டும்.
பிறகு, வாங்கும்போது ஆன்ரோடு விலையை அறிந்துகொள்ள வேண்டும். முழுமையாக அதுபற்றி கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
எக்ஸ்-ஷோரூம் விலை என்றால் என்ன?
மிக எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் எக்ஸ்-ஷோரூம் விலை என்பது கார் விற்பனை செய்யும் டீலர்கள், அந்த வாகனத்தை உற்பத்தி நிறுவனத்திடமிருந்து வாங்கும் உண்மையான விலை.
அந்த விலையில், வாகனப் பதிவுக் கட்டணம், காப்பீடு, சாலை வரி போன்ற எதுவும் சேர்க்கப்பட்டிருக்காது.
எனவே, ஒரு வாகனம் உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனைக்கு வரும்போது இருக்கும் விலைப் பட்டியலில், இவை இடம்பெற்றிருக்காது. அதுமட்டுமல்லாமல், காப்பீடு, வரி போன்றவை வாகனத்துக்கு வாகனம், மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும் என்பதாலும், ஒரு வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலை என்பது பெரும்பாலும் குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என்பதாலும்,விற்பனைக்கு வரும்போது இந்த விலைகளைக் கொண்டே விளம்பரப்படுத்தப்படுகிறது.
ஆனால், இதுதான் வாகனத்தின் உண்மையான அல்லது இறுதியான விலை அல்ல என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.
நிறுவனத்தில் உற்பத்தி செய்ய ஆன செலவு, சரக்கு மற்றும் சேவை வரி, வாகன டீலருக்கான நிகர லாபம் ஆகியவை அடங்கியிருக்கும். சில வாகனங்களுக்கு கூடுதலாக சேர்க்கப்படும் பொருள்களுக்கான விலையும் இதனுடன் பிறகு இணைக்கப்படலாம்.
அண்மைக்காலமாக இருசக்கர வாகனங்கள் நம்பர் பிளேட்டுகள்கூட இல்லாமல்தான் ஷோரூமுக்கு வருகின்றன. அதனை வாங்குவோர் கூடுதலாக நம்பர் பிளேட் போன்றவற்றுக்கு பணம்கொடுத்துதான் வாங்க வேண்டும். இவையும் ஷோரூம் விலையும் அடங்கலாம்.
ஆன்-ரோடு விலை என்பது
டீலரிடமிருந்து வாகனத்தை வாங்கிக் கொண்டு சாலையில் ஓட்டுவதற்கு தயாராக இருக்கும் வாகனத்தின் மொத்த இறுதி விலை.
எக்ஸ்-ஷோரூம் விலையுடன் பதிவுக் கட்டணம், சாலை வரி, காப்பீட்டுக் கட்டணம் என அனைத்துப் பணிகளும் நிறைவு செய்யப்பட்டு, அதற்கான கட்டணங்கள் சேர்க்கப்பட்டு வரும். இரண்டு விலைகளுக்கும் சில ஆயிரங்கள் முதல் லட்சம் வரை வேறுபாடு இருக்கலாம். அது பற்றி டீலர்களிடம் முழுமையாக கேட்டறிந்து கொள்ள வேண்டும்.
எக்ஸ்-ஷோரூம் விலை - ஆன்-ரோடு விலை
இது இறுதியான விலையல்ல - இது இறுதியான விலை
இந்த விலையானது டீலர்கள் உற்பத்தி நிறுவனத்துக்குக் கொடுக்கும் விலை - வாகனத்தைப் பயன்படுத்துபவர் கொடுக்கும் விலை
இதில் வரி, காப்பீடு போன்றவை சேர்க்கப்படாது - பதிவுக் கட்டணம், சாலை வரி, காப்பீடுக் கட்டணம் இடம்பெற்றிருக்கும்.
ஆன்ரோடு விலையைவிடக் குறைவாக இருக்கும் - இதுவே இறுதியான விலை, அதிகமாக இருக்கும்.
ஆன்-ரோடு விலையில் வேறு என்னவெல்லாம் இணைக்கப்பட்டிருக்கலாம்?
ஆண்டு பராமரிப்புக் கட்டணம், வாகனத்தின் சில அடிப்படையான இணைப்புப் பொருள்கள், கூடுதலான இணைப்புப் பொருள்கள், வாரண்டிக் காலத்தை நீட்டிக்கக் கட்டணம், க்ரீன் செஸ் வரி, வாகனத்தை கொண்டுவந்ததற்கான செலவு போன்றவையும் இணைக்கப்படலாம். இது வாகனத்தை வாங்குபவரின் தேவை மற்றும் டீலரின் முடிவுக்கு உள்பட்டதாக இருக்கும்.
Summary
About the main differences in the ex-showroom and on-road prices of a vehicle..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











