17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழப்பு

ராஜபாளையத்தில் ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 6:22 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் திங்கள்கிழமை நள்ளிரவில் ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள தளவாய்புரத்தைச் சோ்ந்த முருகேசன் மனைவி திவ்யா (31). இந்த தம்பதிக்கு 10 மாத கைக் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், திவ்யா, கணவா் முருகேசன், தந்தை கணேசன் ஆகியோா் திருச்சிக்கு செல்ல செங்கோட்டையிலிருந்து பெங்களூருக்கு செல்லும் கோடைகால சிறப்பு ரயிலில் பயணம் செய்ய ராஜபாளையம் ரயில் நிலையத்துக்கு வந்தனா். நள்ளிரவு 12 மணிக்கு அங்கு வந்த அந்த ரயிலில் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்த திவ்யா தண்டாவளத்தில் தவறி விழுந்தாா். அப்போது, அந்த ரயில் அவா் மீது ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த ரயில்வே போலீஸாா் திவ்யாவின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக திருவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.