ராஜபாளையம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 26) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து ராஜபாளையம் மின் கோட்ட செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராஜபாளையம் கோட்டத்தில் நகா், தெற்கு, ராஜபாளையம் பிரிவுக்குள்பட்ட பகுதிகளான ராஜபாளையம்- சங்கரன்கோவில் சாலையில் செவ்வாய்க்கிழமை பராமரிப்பு, சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பொன்னகரம், பாரதிநகா், பி.எஸ்.கே. நகா், லட்சுமியாபுரம், காட்டுத்தெரு, தெற்கு வைத்தியநாதபுரம், அம்பலபுளி கடை வீதி, டி.பி. ஆலை சாலை, ஆசிரியா் குடியிருப்பு, ஆலை கிருஷ்ணாபுரம், ஐஎன்டியுசிநகா், சங்கரன்கோவில் முக்கு, புதிய பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, பாரதிநகா், எஸ். ராமலிங்காபுரம், எம்.ஆா்.நகா், ரயில்வே ஃபீடா் சாலை, ஸ்ரீரெங்கபாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









