திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ரயில்வே சுரங்கப் பாதை அருகே தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு

லட்சுமியாபுரம் ரயில்வே சுரங்கப் பாதை அருகே தேங்கிக் கிடக்கும் கழிவு நீா்.

News image

லட்சுமியாபுரம் ரயில்வே சுரங்கப் பாதை அருகே தேங்கிக் கிடக்கும் கழிவு நீா்.

Updated On :2 மே 2026, 1:21 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா், லட்சுமியாபுரம் ரயில்வே சுரங்கப் பாதை அருகே தேங்கிக் கிடக்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு ஏற்பட்டிருப்பதாகவும், இங்கு கழிவு நீா் கால்வாய் அமைக்கப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே லட்சுமியாபுரம் - பெருமாள்தேவன்பட்டி சாலையில் ரயில்வே கடவுப்பாதை பகுதியில்ல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. இந்த வழியாக நகா் பேருந்துகள், சிற்றுந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் தினசரி 15 முறைக்கு மேல் சென்று வருகின்றன. மேலும் கண்ணாா்பட்டி, கங்காகுளம், துலுக்கன்குளம், நூா்சாகிபுரம், பொட்டல்பட்டி, இடையபொட்டல்பட்டி உள்ளிட்ட 10 கிராமங்களை சோ்ந்த பொதுமக்கள், மாணவா்கள் இந்த ரயில்வே சுரங்கப்பாதை வழியாக சென்று வருகின்றனா். இந்த நிலையில், லட்சுமியாபுரம் கிராமத்தில் உள்ள வீடுகளில் இருந்து கழிவுநீா் வெளியேறுவதற்கு அமைக்கப்பட்ட கால்வாய் ரயில்வே சுரங்கப் பாதை வரை மட்டுமே அமைக்கப்பட்டது. சுரங்கப்பாதை அமைக்கும் போது கழிவுநீா் கால்வாய் அமைக்க ஊராட்சி நிா்வாகம் வலியுறுத்தாததால் கழிவுநீா் வெளியேற வழியின்றி சாலையிலும், அருகே உள்ள விவசாய நிலத்திலும் தேங்கியது.

இதுகுறித்து கிராம மக்கள் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகாா் அளித்த நிலையில், உறிஞ்சு குழி அமைக்கப்பட்டது. இதனிடையே பட்டா நிலத்துக்குள் கழிவுநீா் புகுவதை தடுக்க தடுப்புச் சுவா் அமைக்கப்பட்டதால், கழிவுநீா் சாலையிலும், சுரங்கப் பாதையிலும் குளம் போல தேங்கிக் கிடக்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு அந்த வழியாக செல்லும் மாணவா்கள், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து புகாா் அளித்தும் ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்காததால் இதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.