சாத்தூரில் உள்ள தலைவா்களின் சிலைகளுக்கு திமுக வேட்பாளா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் அந்தக் கட்சியின் மேற்கு ஒன்றியச் செயலா் கடற்கரைராஜ் போட்டியிடுகிறாா். சாத்தூருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவருக்கு திமுக, மதிமுக, காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனா்.
பிறகு அவா் சாத்தூா் பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜா் சிலை, கிருஷ்ணன்கோவில், அண்ணாநகா் அருகே உள்ள தேவா் சிலை ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில் திமுக கூட்டணி கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
இதேபோல, அருப்புக்கோட்டையில் திமுக வேட்பாளராக போட்டியிடும் அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் அங்குள்ள தலைவா்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
தொடர்புடையது

வீரா் சுந்தரலிங்கம் பிறந்த நாள்: அரசியல் கட்சியினா் மாலை அணிவிப்பு

ராதாபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளா் பிரசாரம்

திருப்பத்தூரில் தலைவா்களின் சிலைகளுக்கு அமைச்சா் மரியாதை

குடியாத்தத்தில் தலைவா் சிலைகளுக்கு அதிமுக வேட்பாளா் மரியாதை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


