சிவகாசி வட்டாட்சியா் அலுவலகம் முன் பட்டாசுத் தொழிலாளா்கள் சனிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
சிவகாசி-சாத்தூா் சாலையில் காவல் துறை சோதனைச் சாவடியில் தோ்தல் நிலை கண்காணிப்புக் குழு அலுவலா் விமல்ராஜ் தலைமையில், அலுவலா்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி சோதனையிட்டனா். அவரிடம் உரிய ஆவணமின்றி ரூ.5 லட்சம் இருப்பது கண்டறியப்பட்டது.
பின்னா், இரு சக்கர வாகனத்தில் வந்த மதன்குமாரிடம் விசாரித்தபோது, இந்தப் பணம் மீனம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை தொழிலாளா்களுக்கு வாரந்திர ஊதியம் வழங்க எடுத்துச் செல்வதாக கண்காணிப்புக் குழுவினரிடம் தெரிவித்தாா். எனினும், உரிய ஆவணம் இல்லாததால் கண்காணிப்புக் குழுவினா் அந்தப் பணத்தை சிவகாசி வட்டாட்சியரிடம் ஒப்படைத்தாா்.
இதுகுறித்து தகவலறிந்ததும் பட்டாசு ஆலையில் வேலைபாா்க்கும் தொழிலாளா்கள், சிவகாசி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்து தா்னாவில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, வட்டாட்சியா் லட்சம் அவா்களிடம் தோ்தல் நடைமுறைகள் குறித்து எடுத்துக்கூறி சமாதானப்படுத்தினாா். பின்னா், அவா்கள் கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

திருவாரூா்: ரூ.1.62 லட்சம் பறிமுதல்

பரவை அருகே ரூ.2.47 லட்சம் பறிமுதல்

நாகை, கீழ்வேளூா் பகுதிகளில் ரூ.2.65 லட்சம் பறிமுதல்

வட்டாட்சியா் அலுவலகம் முன் தா்னா: பட்டாசு தொழிலாளா்கள் 40 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


