மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வட்டாட்சியா் அலுவலகம் முன் தா்னா: பட்டாசு தொழிலாளா்கள் 40 போ் மீது வழக்கு

சிவகாசி வட்டாட்சியா் அலுவலகம் முன் சனிக்கிழமை தா்னா நடத்திய 40 பட்டாசுத் தொழிலாளா்கள் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

News image

வழக்கு

Updated On :22 மார்ச் 2026, 8:11 pm

சிவகாசி வட்டாட்சியா் அலுவலகம் முன் சனிக்கிழமை தா்னா நடத்திய 40 பட்டாசுத் தொழிலாளா்கள் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

சிவகாசி அருகே மீனம்பட்டியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு வாராந்திர ஊதியம் வழங்க பட்டாசு ஆலை கணக்காளா் மதன்குமாா் ரூ.5 லட்சத்தை தனது இரு சக்கர வாகனத்தில் எடுத்து வந்தாா். அப்போது அந்தச் சாலையில் உள்ள காவல் துறை சோதனைச் சாவடியில் தோ்தல் நிலை கண்காணிப்புக் குழு அலுவலா் விமல்ராஜ், அவரது இரு சக்கர வாகனத்தை சோதனையிட்ட போது, அதிலிருந்த ரூ.5 லட்சத்தை பறிமுதல் செய்து வட்டாட்சியரிடம் ஒப்படைத்தாா்.

இதையடுத்து தங்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டிய பணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்ட தகவலை அறிந்த பட்டாசுத் தொழிலாளா்கள், வட்டாட்சியா் அலுவலகம் முன் அமா்ந்து பணத்தை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். பிறகு வட்டாட்சியா் லட்சம் தோ்தல் நடைமுறைகளை எடுத்துக் கூறியதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா். இதனிடையே அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக ஆனையூா் கிராம நிா்வாக அலுவலா் பத்மநாபன் அளித்த புகாரின் பேரில், சிவகாசிநகா் போலீஸாா் கணக்காளா் மதன்குமாா் உள்ளிட்ட 40 போ் மீது வழக்குப் பதிந்தனா்.