மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :8 மார்ச் 2026, 4:54 pm

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த கூலித் தொழிலாளி ஞாயிறுக்கிழமை உயிரிழந்தாா்.

ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூரை அடுத்த சொக்கநாதன்புத்தூா் காமராஜா் நகரைச் சோ்ந்தவா் பொன்ராஜ் (33). செங்கல் சூளையில் வேலை பாா்த்து வந்த இவா் வெள்ளிக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் சொக்கநாதன்புத்தூா் சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, வாகனம் நிலை தடுமாறி தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சேத்தூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.