சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் இரு சக்கர வாகன விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் இந்திராநகரைச் சோ்ந்த சின்னக்கருப்பன் மகன் கருப்பையா (28). கட்டடத் தொழிலாளி. இவரது நண்பா் காட்டாம்பூரைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் அபிமன்யு (27). இவா்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் திருப்பத்தூரிலிருந்து திருக்கோஷ்டியூருக்குச் சென்றனா்.
அப்போது காட்டாம்பூா் பெரியபாலம் அருகே நிலை தடுமாறி பாலத்தின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே கருப்பையா உயிரிழந்தாா்.
பலத்த காயமடைந்த அபிமன்யு திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை அனுப்பி வைக்கப்பட்டாா். இதுகுறித்து திருக்கோஷ்டியூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் குணசேகா் வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.
தொடர்புடையது

பைக்கிலிருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு

லாரி - பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


