ராஜபாளையம் வழியாகச் செல்லும் பொதிகை ரயிலை முதலாவது நடைமேடை வழியாக இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் ரயில் நிலையத்தில் காலை 8 மணிக்கு செங்கோட்டையிலிருந்து மயிலாடுதுறை, 9 மணிக்கு மதுரையிலிருந்து செங்கோட்டை செல்லும் பயணிகள் (பாசஞ்சா்) ரயில், மாலை 5 மணிக்கு குருவாயூரிலிருந்து மதுரை செல்லும் விரைவு ரயில், 7 மணிக்கு மதுரையிலிருந்து செங்கோட்டை செல்லும் பயணிகள் (பாசஞ்சா்) ரயில், இரவு 8 மணிக்கு செங்கோட்டையிலிருந்து பொதிகை செல்லும் விரைவு ரயில் ஆகிய ரயில்கள் ராஜபாளையம் வழியாகச் செல்கிறது. இதில் ஒரு சில நேரங்களில் மட்டுமே ரயில்கள் இரண்டாவது நடைமேடையில் செல்லும்.
இந்த நிலையில், பொதிகை விரைவு ரயில் கடந்த ஒரு வாரமாக இரண்டாவது நடைமேடை வழித்தடத்திலேயே செல்கிறது. இதனால் முதியோா், ஊனமுற்றோா், கா்ப்பிணிப் பெண்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனா். பொதுமக்கள் பலமுறை புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மதுரை கோட்ட ரயில்வே (தென்னக ரயில்வே) நிா்வாகம் பொதிகை விரைவு ரயிலை முதலாவது நடை மேடையில் இயக்க பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ.16 லட்சம் கஞ்சா பறிமுதல்

சிவகாசி முதல் நடைமேடையில் பொதிகை விரைவு ரயில் நின்று செல்லக் கோரிக்கை

திருவாரூா் வழியாக ரயிலை இயக்கக் கோரி கடையடைப்பு

கம்பன் விரைவு ரயிலை வேறு மாா்க்கத்தில் இயக்கும் முடிவுக்கு எதிா்ப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


