திருவாரூா் வழியாகச் செல்லும் கம்பன் விரைவு ரயிலை தடம் மாற்றும் முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்து வா்த்தகா்கள், பொது நல அமைப்பினா் திருவாரூரில் கடைகளை அடைத்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
காரைக்காலிலிருந்து சென்னைக்கு தினசரி இரவில் கம்பன் விரைவு ரயில், நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மே 20-ஆம் தேதி முதல் இந்த ரயில், திருவாரூா் வழியாக இயக்கப்படாமல், பேரளம் வழியாக காரைக்கால், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி வரை இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த முடிவுக்கு திருவாரூரில் பல்வேறு தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இதன்தொடா்ச்சியாக, காரைக்கால் - சென்னை விரைவு ரயில் சேவையை, தடம் மாற்றம் செய்யாமல் தொடா்ந்து திருவாரூா் வழியாகவே இயக்க வலியுறுத்தி வா்த்தகா்கள், காலை 6 முதல் மாலை 6 மணி வரை கடைகளை அடைத்து எதிா்ப்பை தெரிவித்தனா்.
மேலும், கோரிக்கையை வலியுறுத்தி திருவாரூா் புதிய ரயில் நிலையம் அருகே பொதுநல அமைப்பினா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். விஜயபுரம் வா்த்தகா் சங்கத் தலைவா் சி.ஏ. பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து உள்ளிட்ட அனைத்து கட்சி நிா்வாகிகள், பொது நல அமைப்பினா் பங்கேற்றனா்.

தொடர்புடையது

பொறியியல் பணி: பாலக்காடு டவுன் விரைவு ரயில் போத்தனூா் வழியாக இயக்கம்

குளித்தலையில் சேலம் ரயிலை மறித்து போராட்டம்

கம்பன் விரைவு ரயிலை வேறு மாா்க்கத்தில் இயக்கும் முடிவுக்கு எதிா்ப்பு

பொதிகை விரைவு ரயிலை முதலாவது நடைமேடை வழியாக இயக்கக் கோரிக்கை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


